ஜோதிகா கர்ப்பமாக இருந்தபோது சூர்யா என்ன செஞ்சாரு தெரியுமா?.. நடிகை சொன்ன சீக்ரெட்

சென்னை: சூர்யாவும் ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். திருமணமாகி இத்தனை வருடங்களில் தங்களது வாழ்க்கையை சுமூகமாக நகர்த்திக்கொண்டிருக்கும் ஜோவும், சூர்யாவும் கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர்கள் குறித்து சமீரா ரெட்டி சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் சூர்யாவும், ஜோதிகாவும் ஒன்றாக நடித்தார்கள். அந்தப் படத்திலிருந்தே இரண்டு பேருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கத்தை நாளடைவில் அவர்கள் காதலாக மாற்றினார்கள். இருவரும் காதலிக்க ஆரம்பித்த பிறகு பேரழகன், சில்லுனு ஒரு காதல், காக்க காக்க என பல படங்களில் ஒன்றாக பணியாற்றினார்கள். ஜோதிகாவை பொறுத்தவரை சூர்யாவை காதலிக்க ஆரம்பித்த பிறகுதான் தனது கரியரில் படு பிஸியாக இயங்க ஆரம்பித்தார்.

திருமணம் செய்துகொண்ட ஜோடி: இருவரின் காதலும் வீட்டுக்கு தெரியவந்தது. ஜோதிகாவின் வீட்டில் சீக்கிரமாகவே திருமணத்துக்கு ஓகே சொல்லிவிட்டார்கள். ஆனால் சூர்யாவின் தந்தையான சிவகுமார் முதலில் இத்திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கும் மேலாக ஓகே சொல்வதற்கு டைம் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் திருமணம் செய்துகொள்வதில் இரண்டு பேரும் ஸ்ட்ரிக்ட்டாக இருந்ததால் சிவகுமாரும் ஓகே சொல்லிவிட்டார்.

Actress Sameera Reddy Talks about Suriya and Jyothika Here are details
Photo Credit:

ஃபேவரைட் ஜோடி: திருமணம் செய்துகொண்ட அவர்கள் இன்றுவரை கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடிகளில் ஒன்றாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். முதலில் குடும்ப வாழ்க்கையை மட்டும் பார்த்துக்கொண்டிருந்த ஜோதிகா, சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரின் சப்போர்ட்டோடு மீண்டும் நடிக்க வந்தார். அப்படி அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்தார்.

பாலிவுட்டில் பிஸி: தொடர்ந்து தமிழில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் ஜோவின் கவனம் முழுவதும் பாலிவுட்டில் இருக்கிறது. தனது கணவரையும் அந்தத் திரைத்துறையில் கவனம் செலுத்த வைத்திருக்கிறார். இதன் காரணமாகவும், தனது தாய்க்காகவும் கணவரோடு சென்று மும்பையிலும் செட்டில் ஆகியிருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க அவர்களது மகள் தியா ஆவணப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஆஸ்கர் போட்டியில் அந்தப் படத்தை திரையிடவும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்கள்.

சமீரா ரெட்டி பேட்டி: இந்நிலையில் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் சூர்யாவுடன் பணியாற்றிய மெமரிஸை ஷேர் செய்த சமீரா ரெட்டி, "வாரணம் ஆயிரம் ஷூட்டிங்கிற்காக சான் ஃபிரான்சிஸ்கோவில் இருந்தோம். அப்போது ஜோதிகா கர்ப்பமாக இருந்தார். தான் தந்தை ஆகப்போவதற்காக ரொம்பவே ஆர்வத்துடன் இருந்தார் சூர்யா. மேலும் அந்த சமயத்தில் பிறக்கப்போகும் குழந்தைக்காக அவ்வளவு ட்ரெஸ்களை சூர்யா எடுத்தார். அது பார்ப்பதற்கே அவ்வளவு க்யூட்டாக இருந்தது. அந்த மெமரிஸ்தான் எனது வாழ்க்கையில் சிறந்தது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X