For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  'ஆடி போய் ஆவணி வந்தா டாப்பா வருவான்' சரண்யா பொன்வண்ணன் பிறந்தநாள் ஸ்பெஷல்

  By Manjula
  |

  சென்னை: 'ஆடி போய் ஆவணி வந்தா அவன் டாப்பா வருவான்' என்று பேசி ரசிகர்களைக் கவர்ந்த நடிகை சரண்யா பொன்வண்ணன் இன்று தன்னுடைய 46 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

  'நாயகன்' படத்தில் கமலின் மனங்கவர்ந்த நாயகியாக நடிப்பைத் தொடங்கிய சரண்யா சுமார் 100 படங்களுக்கும் மேல் நடித்து படங்களில் 'செஞ்சுரி அடித்துவிட்டார்.

  தமிழ் சினிமாவின் பாசமான அம்மா என்று விருது கொடுக்கும் அளவுக்கு அம்மா வேடத்தில் அசத்தி வரும் சரண்யாவின், சில மறக்க முடியாத படங்களை இங்கே பார்க்கலாம்.

  எம் மகன்

  எம் மகன்

  சீரியஸ் படங்களான 'ராம்', 'தவமாய் தவமிருந்து' படங்களில் சரண்யா தன்னுடைய அபாரமான நடிப்பால் முத்திரை பதித்திருந்தார். எனினும் சிடுசிடு கணவர்-அப்பாவி மகனுக்கு இடையில் மாட்டிகொண்டு தவிக்கும் 'எம் மகன்' திரைப்படமே சரண்யாவின் நகைச்சுவையை முழுமையாக வெளிக்கொணர்ந்தது. கணவருக்குத் தெரியாமல் பிறந்த வீட்டிற்கு சென்று மயக்கம் போட்டு விழும் காட்சி தொடங்கி முதல் பாதி முழுவதும் சரண்யா-வடிவேலு காட்சிகள் ரசிகர்களை நகைச்சுவையால் குளிப்பாட்டியதில் 'எம் மகன்' சிரமப்படாமல் ஹிட் பட்டியலில் இணைந்தது.

  களவாணி

  களவாணி

  'ஆனிமுடிஞ்சி, ஆடி முடிஞ்சி, ஆவணி வந்தா அவன் டாப்பா வருவான்' என்று இப்படத்தில் சரண்யா பேசும் வசனம் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பத் தவறவில்லை. மகன் செய்யும் தவறுகளை கணவரிடம் மறைக்கும் பாசமான அம்மா வேடத்தில் சரண்யா கலக்கியிருந்தார். 'நான் தூக்கு மாட்டிக்கற மாதிரி நடிக்கிறேன் நீ போய் எல்லோரையும் கூப்பிடு' என்று படம் முழுவதும் ஸ்கோர் செய்திருந்த சரண்யாவுக்கு 'களவாணி' நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

  ஒரு கல் ஒரு கண்ணாடி

  ஒரு கல் ஒரு கண்ணாடி

  இதில் டிகிரி முடிக்க முடியாமல் தடுமாறும் மனைவி வேடத்தில் சரண்யா அசத்தியிருப்பார்.உதயநிதியின் அறிமுகப்படமான 'ஒரு கல் ஒரு கண்ணாடி'யை ஓட வைத்ததில் பெரும்பங்கு சரண்யா+ சந்தானத்தையே சேரும். அதிலும் 'சரவணா எனக்கு கோபமா பேச வராதேடா' என்ற காட்சியில் சரண்யா கொடுக்கும் எக்ஸ்பிரஷன்களுக்காகவே இப்படத்தைப் பார்க்கலாம்.

  வேலையில்லாப் பட்டதாரி

  வேலையில்லாப் பட்டதாரி

  இப்படத்தில் சரண்யா-சமுத்திரக்கனி இருவரும் தனுஷின் பெற்றோராக ஆகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். வழக்கம்போல இதிலும் கணவரிடமிருந்து மகனைக் காப்பாற்றும் அம்மாதான் என்றாலும் தன்னுடைய வெரைட்டி நடிப்பால் சரண்யா வித்தியாசம் காட்டத் தவறவில்லை. 'பக்கத்து வீட்டுப் பொண்ணு சினிமா ஹீரோயின் மாதிரி இருக்கா' என்று அமலாபாலை வர்ணிப்பது, குடித்து விட்டு வந்த தனுஷை விளக்குமாற்றால் பின்னிஎடுப்பது போன்ற காட்சிகளில் இயல்பை மீறாமல் ஸ்கோர் செய்வதெல்லாம் இவரால் தான் முடியும்.

  தேசிய விருது

  தேசிய விருது

  தென்மேற்குப் பருவக்காற்று' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது இவரைத் தேடி வந்தது. தேசிய விருது உட்பட மொத்தம் 9 விருதுகளை இதுவரை வென்றிருக்கிறார்.இதுபோல மேலும் பல படங்களில் நடித்து, மென்மேலும் விருதுகளை வெல்ல வேண்டும் என ரசிகர்களுடன் இணைந்து நாமும் வாழ்த்துவோம்.

  சரண்யா பொன்வண்ணனுக்கு தட்ஸ்தமிழ் சார்பாக 'இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்'.

  English summary
  Today Actress Saranya Ponvannan Celebrating Her 46th Birthday. From thatsTamil and all our Readers around the world, wishing this marvelous actor a wonderful birthday ahead.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X