For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  உண்மையில் ஷகீலா பெண் தாதா!

  By Mayura Akilan
  |

  சென்னை: உண்மை படத்தில் கவர்ச்சி நடிகை ஷகீலா பெண்தாதாவாக நடித்துள்ளாராம்.

  சவாடியா என்னும் இந்திப்படம் உள்ளிட்ட 3 படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியவர் பி.ரவிக்குமார். சென்னையில் பிறந்த இவர் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் மும்பைக்கு சென்று இந்திப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

  தற்போது இவர் இயக்கும் புதிய படம் ‘உண்மை'. தான் இயக்கும் முதல் படம், தமிழ் படமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மதர் கிரின்லேண்ட் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி ‘உண்மை' என்ற படத்தை இயக்கி வருகிறார்.இதில் இவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சுஜிபாலா நடித்துள்ளார்.

  சுஜிபாலாவுக்கு பதில் ஷர்மிளா, ஷகிலா, ஷர்மிலி

  சுஜிபாலாவுக்கு பதில் ஷர்மிளா, ஷகிலா, ஷர்மிலி

  இந்த படத்தில் நடித்த போது, எனக்குக் கொலை மிரட்டல் விட்டார்.." என்று ஹீரோயின் சுஜிபாலாவும், "அவர் சொல்வதெல்லாம் பொய். அவர்தான் என்னுடைய சொத்துக்களையெல்லாம் சுரண்டிவிட்டார்..." என்று ஹீரோ கம் தயாரிப்பாளர் கம் இயக்குநரான ரவிக்குமாரும் மாறி மாறி புகார் சொல்லிக்கொண்டனர்.

  சுஜிபாலா வரவில்லை

  சுஜிபாலா வரவில்லை

  ஒருவழியாக உண்மை படத்தின் குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று இரவு ரெசிடென்ஸி டவர்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஹீரோயின் சுஜிபாலா வரவில்லை. ஹீரோயின் சுஜிபாலாவுக்கு பதிலாக படத்தில் நடித்த ஷர்மிளா, ஷகிலா, ஷர்மிலி மூவரும் வந்திருந்தனர். இவர்களுடன் ராதாரவி, கோட்டா சீனிவாசராவ், சிங்கம் புலி, வாசு விக்ரம், மீனாட்சி தேசாய், பாண்டு, வையாபுரி, சிந்து, அன்வர் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

  அரசியல் கதை

  அரசியல் கதை

  இந்த நாட்டில் அரசியல்வாதிகள் பதவிக்கு வருவதற்கு முன்னால் வாக்குறுதிகளை அள்ளிக் கொடுக்கின்றனர். பின்னர் ஆடம்பர வாழ்க்கைக்காக கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விட்டு செய்யும் ஊழலை வெளிப்படுத்துவதுதான் படத்தின் கதையாம். இதுவரை கவர்ச்சி, நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஷகிலா, இப்படத்தில் வில்லியாக நடித்துள்ளார்.

  லேடி டான்

  லேடி டான்

  ஷகிலா பேசும்போது "நான் எப்போதும் கவர்ச்சியாத்தான் நடிச்சிருக்கேன். அப்படிப்பட்ட கேரக்டர்கள்தான் எனக்கு வரும். ஆனா இந்த படத்துல ஒரு டான் கேரக்டர்ல நடிக்கணும்னு கூப்பிட்டாரு ரவி ஸார். நான் முதல்ல தயங்கினேன். நான் எப்படி ஸார்..? எனக்கு சூட்டாகுமான்னு கேட்டேன். நிச்சயம் சூட்டாகும்.. நீங்கதான் பண்ணணும்னு கட்டாயப்படுத்தி நடிக்க வைச்சார் என்றார்.

  வித்தியாசமான அனுபவம்

  வித்தியாசமான அனுபவம்

  இயக்குநர் நடிச்சதை பார்த்து அப்படியே நடிப்பேன். இதுவரைக்கும் என் லைப்ல இப்படியொரு கேரக்டர் செஞ்சதில்லை.. உங்களுக்கும் இதுவொரு வித்தியாசமான அனுபவமா இருக்கும்னு நினைக்கிறேன்.." என்றார்.

  அம்மா கதாபாத்திரம்

  அம்மா கதாபாத்திரம்

  நடிகை ஷர்மிளா பேசும்போது, "கல்யாணமாகி பையன் பிறந்த பின்னாடி இப்பத்தான் முதல் முறையா நான் அவுட்டோர் ஷூட்டிங்கிற்காக இந்தப் படத்துக்காகத்தான் போனேன்.. படத்துல சின்ன வயசு ரவிக்குமாருக்கு அம்மாவா நான் நடிச்சிருக்கேன்.. நல்ல கேரக்டர்.." என்றார்.

  ஊழல் அரசியல்வாதிகள்

  ஊழல் அரசியல்வாதிகள்

  படத்தின் ஹீரோ ரவிக்குமார் பேசும்போது, "உண்மையை ஊரறியச் சொல்லணும்ன்றதுதான் இந்தப் படத்தோட கரு. நாட்டுல இப்போ நடந்துக்கிட்டிருக்கிற பல ஊழல்களை செய்யும் அரசியல்வாதிகளால மக்கள் ரொம்ப வெறுப்புல இருக்காங்க. அது மாதிரியான சில சம்பவங்கள் இந்தப் படத்துல வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கேன்.." என்றார்.

  இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஊட்டி, கொடைக்கானல், நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று, இறுதிக் கட்டமாக குலுமனாலியில் நடந்து முடிந்துள்ளதாம்

  English summary
  Director P Ravikumar who was involved in actress Sujibala marriage controversy is currently hearing for his next film ‘Unmai’. A Press Meet regarding the film was held on 17th Sep 2014 at Residency Tower in T Nagar. Ravikumar, Shakeela, Sharmili and Sreeram took part in the event.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X