Shalini Pandey: இட்லி துணியுடன் இட்லி கடை ஹீரோயின்.. தனுஷ் ஜோடின்னா சுமமாவா.. கடலே கொந்தளிக்குதே!
சென்னை: நடிகை ஷாலினி பாண்டே, விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்ததின் மூலம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என அனைத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தமிழில் 100% காதல், நிசப்தம், கொரில்லா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான, இந்தி வெப் தொடரான 'டப்பா கார்டெல்' என்கிற வெப் தொடரில், ஜோதிகா, நிமிஷா சஜயனுடன் இணைந்து நடித்திருந்தார்
தற்போது இவர், தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்து வரும்,‛இட்லி கடை' திரைப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாகவும், அருண் விஜய்க்கு தங்கையாகவும் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருடன் அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ், பார்த்திபன், ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படம் வருகிற அக்டோபர் ஒன்றாம் தேதி திரைக்கு வருகிறது. இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷாலினி கடற்கரையில் பிகினியில் குதூகலமாக இருக்கும் கவர்ச்சி போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலர், லைக்குகளை குவித்து, இதயத்தை பரிசளித்து வருகின்றனர். ஷாலினி பாண்டேவை இன்ஸ்டாகிராமில் இரண்டு புள்ளி இரண்டு மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

மோசமாக நடந்து கொண்ட இயக்குநர்: அண்மையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஷாலினி பாண்டே, சினிமாவிற்கு வந்த புதில் தன் வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். நான் முதல் படத்தில் நடித்த போது, அனைவரும் நன்றாக பழக வேண்டும், கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது, அப்படி நடந்து கொண்டால், சினிமா வாய்ப்பை கிடைக்காது என்றார்கள். இதனால், நான் யாரிடமும் கடுமையாக நடந்து கொள்ள மாட்டேன். ஆனால், நான் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது கேரவனில் ஆடை மாற்றிக்கொண்டு இருந்தேன். அப்போது அந்த படத்தின் இயக்குநர் கதவை தட்டாமல், கதவை திறந்து உள்ளே வந்துவிட்டார். தனக்கு அப்போது 22 வயது தான். நான் கோபத்தில் தான் இயக்குநரை வெளியே போகச் சொல்லி அனைவருக்கும் கேட்கும் படி கத்தினேன் என்று ஷாலினி பாண்டே அந்த பேட்டியில் கூறியிருந்தார். அவர் அந்த இயக்குநர் யார் என்று சொல்லவில்லை.


Click it and Unblock the Notifications











