டாப் ஹீரோயின்களையே மிஞ்சிட்டாரே...வைரலாகும் அஜித் மச்சினியின் கிளாமர் ஃபோட்டோ

சென்னை : 1980 களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயின் ஆனவர் ஷாலினி. சில படங்களில் ஹீரோயினாக நடித்த இவர், அஜித்தை காதலித்து, திருமணம் செய்து கொண்டு, செட்டில் ஆகி விட்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அக்காவை போலவே, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ராஜநடை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 1990 களில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கலக்கியவர் ஷாமிலி. அஞ்சலி, துர்கா, தைப்பூசம் என இவர் நடித்த பல படங்கள் செம ஹிட் ஆகி உள்ள. தனது நான்காவது வயதிலேயே அஞ்சலி படத்திற்கு மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையாக நடித்து, பல விருதுகளை வென்றவர் ஷாமிலி.

ரசிகர்களை கவரும் ஃபோட்டோ

ரசிகர்களை கவரும் ஃபோட்டோ

பிறகு வளர்ந்து தமிழில் வீர சிவாஜி, மலையாளத்தில் ஓரிரு படங்களிலும் நடித்தார். நடிகர் ரிச்சர்டின் சகோதரியும், நடிகர் அஜித்தின் மச்சினியும் ஆவார். சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் ஷாமிலி, தன்னை பின்தொடர்பவர்களை கவருவதற்காக தொடர்ந்து தனது ஃபோட்டோக்களை வெளியிட்டு வருகிறார் ஷாமிலி.

கலாய்த்த நெட்டிசன்கள்

கலாய்த்த நெட்டிசன்கள்

சமீபத்தில் உடல் எடையை குறைக்கிறேன் என்ற பேரில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி விட்டார். இந்த ஃபோட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், என்ன இப்படி வயதானது போல் மாறிட்டிங்க. உங்களை விட உங்க அக்கா இளமையா இருக்காங்க. இந்த தோற்ற மாற்றம் உங்க சினிமா கனவை காலி பண்ணிவிடும் என பல விதங்களில் கமெண்ட் செய்து கலாய்த்தனர்.

கிளாமர் ஃபோட்டோ

கிளாமர் ஃபோட்டோ

இருந்தாலும் தான் போகும் இடமெல்லாம் ஃபோட்டோ எடுத்து, வவிடாமல் பதிவிட்டு வருகிறார் ஷாமிலி. அப்படி சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள கிளாமர் ஃபோட்டோ வைரலாகி வருகிறது. ஒயிட் டிராஸ்பேரன்ட் ஆடையில் உள்ளாடை ஏதும் அணியாமல், பின்னழகை காட்டி மூன்று விதமாக போஸ் கொடுத்த ஃபோட்டோக்களை ஒன்றாக இணைத்து பதிவிட்டுள்ளார்.

ரீஎன்ட்ரி கொடுக்கும் ஷாமிலி

ரீஎன்ட்ரி கொடுக்கும் ஷாமிலி

டாப் ஹீரோயின்களையே மிஞ்சும் அளவிற்கு ஷாமிலி கொடுத்திருக்கும் கிளாமர் போஸ், அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. லேட்டஸ்ட் தகவலின் படி, மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர தயாராகி வருகிறாராம் ஷாமிலி. அதற்காக தான் இந்த கிளாமர் ஃபோட்டோ பகிர்வாம். தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் கதை கேட்டு வருகிறாராம். விரைவில் இவரின் ரீஎன்ட்ரி படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X