»   »  பள்ளி மாணவர்ளுக்கு உதவிய நடிகை ஷிவாணி

பள்ளி மாணவர்ளுக்கு உதவிய நடிகை ஷிவாணி

By: Vasu Shankar
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ், தெலுங்கு, கன்னட பள்ளி மாணவர்களுடன் பொங்கல் பொங்கி பொங்கலைக் கொண்டாடினார் நடிகை ஷிவாணி. மேலும் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கல்வி கற்க உதவும் வகையில் அவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

கன்னட முன்னணி நடிகை

கன்னட முன்னணி நடிகை

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் நடிகை ஷிவாணி. கன்னடத் திரையுலகமான சாண்டல்வுட்டில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நடிகை இவர். பல்வேறு கன்னடப் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

2008 முதல்...

2008 முதல்...

2008 முதலே இவர் கன்னடப் படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

பொங்கல் கொண்டாட்டம்

பொங்கல் கொண்டாட்டம்

இந்த நிலையில் பெங்களூரு காக்ஸ் டவுன் பகுதியிலுள் பள்ளிச் சிறுவர்களுடன் இவர் பொங்கல் கொண்டாடினார்.

பள்ளியில் விழா

பள்ளியில் விழா

இங்குள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம் பயிலும் மாணவர்களுடன் அவர் பள்ளி வளாகத்தில் பொங்கல் கொண்டாடினார். புதுப் பானையில் பொங்கல் வைத்து பொங்கல் பொங்கி வர பொங்கலோ பொங்கல் என்று கூவி அவர் பரவசமிட்டார்.

பாரதிநகர்

பாரதிநகர்

இந்த நிகழ்ச்சிக்கு பாரதிநகர் நகர் குடியிருப்போர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. காக்ஸ் டவுனிலுள்ள ஷோபனா நினைவுப் பள்ளியில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமூக வேசகர் என்.எஸ். ரவி செய்திருந்தார்.

நலத்திட்ட உதவிகள்...

நலத்திட்ட உதவிகள்...

பின்னர் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான நல உதவிகளையும் நடிகை ஷிவாணி வழங்கினார். அவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், பைகள், நலத் திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். மேலும் அப்பகுதி மக்களுக்கு போர்வைகள் உள்ளிட்டவற்றையும் அவர் வழங்கினார்.

கல்வி வளர்ச்சிக்கு...

கல்வி வளர்ச்சிக்கு...

பள்ளி மாணவர்களுக்கு கல்விதான் முக்கியம். அதை அவர்கள் தொடர்ந்து சிறப்பாக செய்தால் வாழ்வில் முன்னேறலாம். சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நான் எப்போதும் உதவுவேன் என்றார் அவர்.

English summary
Actress Shivani with school children takes part in the Shankranthi celebration of ‘Pongal’ organised by Bharathinagar Residents Fourm at Shobana Memorial School, Coxtown in Bengaluru on Thursday. In that function Actress Shivani has given aid to the school children with note books, school bags and all.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil