அடடா... சுஹாசினிக்கு இப்படி ஒரு திறமை இருக்கா... நடிகை ஷோபனா பகிர்ந்த விஷயம்!

சென்னை: நடிகை பத்மினியின் நெருங்கிய உறவினரான ஷோபனா, தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். கிளாசிகல் டான்சரான இவர், நடனத்தின்மீது கொண்ட ஆர்வத்தால் திருமணமே செய்துக் கொள்ளவில்லை. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த ஆண்டில் வெளியான கல்கி 2898 ஏடி படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷோபா இணையத்தல் ஒரு பதிவினை போட்டு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளார்.

கிளாசிகல் டான்சரான ஷோபானா, ரஜினியுடன் தளபதி, சிவா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தன. குறிப்பாக தளபதி படத்தின் சுந்தரி கண்ணால் ஒரு சேதி என பாடலுக்கு கண்களாலேயே கவிதை பாடியவர் ஷோபனா. தற்போது நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஷோபானா, தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு சுவாரஸ்யமான கேள்வியை ரசிகர்களிடம் முன்வைத்தார். அதாவது, மணிரத்னம் இயக்கிய 'தளபதி' திரைப்படத்தின் ஒரு காட்சியால் ஈர்க்கப்பட்ட ஓவியம் ஒன்றைப் பகிர்ந்து, அதை படத்தை வரைந்தது யார் என்று ரசிகர்களை கேட்டுள்ளார். ஆற்றில் ஒரு பெண் தம்பூரா வாசிப்பதையும், ஒரு இளைஞன் அவளை ரசிக்கும் படி அந்த ஓவியம் உள்ளது.

shobana suhasini
Photo Credit:

நடிகை ஷோபனா: மேலும், இந்த ஓவியத்தை வரைந்தது ஒரு நடிகை, என் உயிர் தோழி, இயக்குனர், ஒளிப்பதிவாளர், மனிதநேயமிக்கவர்.. க்ளுவை கொடுத்துவிட்டேன் இப்போது யார் கண்டுபிடியுங்கள் என பதிவிட்டுள்ளார். இந்தக் கேள்வியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஷோபனாவின் இந்த புதிருக்கு ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் பதிலளித்தனர். ஷோபானாவின் ரசிகர் ஒருவர் இது "ரேவதி மேடம்" என்றும், மற்றொருவர் "ஷோபனா சேச்சி தான் இதை வரைந்திருப்பார் என எழுதினார். மூன்றாவதாக ஒருவர், "சுஹாசினி அல்லது ரேவதி, இருவரும் நீங்க கொடுத்த க்ளுவுக்கு பொருத்தமானவர்களாக இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து சஸ்பென்ஸை உடைத்த ஷோபானா, அந்த டிஜிட்டல் ஓவியத்தை வரைந்தது சுஹாசினி தான். சுஹாசினி அவர்கள் மெட்ராஸ் திரைப்பட நிறுவனத்தில் ஒளிப்பதிவு கற்கச் சேர்ந்து, அங்கிருந்து பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவினை பார்த்த இணையவாசிகள் இப்படி ஒரு திறமை சுஹாசினிக்கு இருக்கா என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ராமாயணம் படத்தில்: நடிகை ஷோபனா, அடுத்ததாக நித்தேஷ் திவாரி இயக்கும் பிரம்மாண்டமான பாலிவுட் படமான 'ராமாயணம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர். ஷோபனா ராவணனின் தாயான கைகேசியின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், ஏ.ஆர். ரஹ்மானும் ஹான்ஸ் ஜிம்மரும் இசையமைக்கும் இப்படத்தில், 'கே.ஜி.எஃப்' புகழ் யஷ் வில்லன் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஷோபனா கடைசியாக மோகன்லால் நடித்த 'தொடரும்' படத்தில் மோகன்லாலில் மனைவியாக நடித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X