நடிகை சோபனாவுக்கு ஒமைக்ரான் பாதிப்பு...கலக்கத்தில் திரையுலகம்

சென்னை : நடிகையும், பிரபல நடன கலைஞருமான சோபனாவிற்கு ஒமைக்ரான் பாசிடிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திரையுலகினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

திரையுலகை சேர்ந்த பலரும் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிரபலங்கள் பலர் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நடிகை சோபனாவிற்கும் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

80 களின் முன்னணி நடிகை

80 களின் முன்னணி நடிகை

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் பிரபல நடிகையாக இருந்து வரும் சோபனா, ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். 1980, 90 களில் பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர் சோபனா. இவர் தற்போது கேரளாவில் வசித்து வருகிறார்.

ஒமைக்ரான் தொற்று

ஒமைக்ரான் தொற்று

இந்நிலையில் தனக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டிருப்பதை சோஷியல் மீடியா மூலம் அவரே தனது ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார். அதோடு, அனைவரும் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும், தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்து கொள்ளுமாறும் சோபனா கேட்டுக் கொண்டுள்ளார்.

ஊசி போட்டும் பாதிப்பு

ஊசி போட்டும் பாதிப்பு

தான் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்ட பிறகும் தனக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. முதல் நாளில் தனக்கு மூட்டு வலி, தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்ததாகவும், தான் இரண்டு தடுப்பூசிகள் போட்டு கொண்டு பிறகும் தனக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் சோபனா தெரிவித்துள்ளார்.

முதல் நாளிலேயே அறிகுறிகள்

முதல் நாளிலேயே அறிகுறிகள்

தான் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் நோயின் பாதிப்பில் இருந்து 85 சதவீதம் தப்பி விட்டதாகவும், நோய் அறிகுறிகள் ஒவ்வொரு நாளும் படிப்படியாக குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த உருமாறிய பெருந்தொற்றில் இருந்து விரைவில் மீண்டு வர நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்து வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் பிரார்த்தனை

ரசிகர்கள் பிரார்த்தனை

சோபனா இதை பதிவிட்ட அடுத்த நிமிடமே ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக வாழ்த்து தெரிவிக்க துவங்கி விட்டனர். சோபனா சோஷியல் மீடியா வழியாக தொடர்ந்து தனது ரசிகர்களுடன் பேசக் கூடியவர்.

படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை

படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை

இவர் கடைசியாக 2020 ல் Varane Avashyamund படத்தில் சுரேஷ் கோபியுடன் இணைந்து நடித்திருந்தார். அதற்கு பிறகு படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்த சோபனாவிடம் தற்போது சில மலையாள படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அனைவரையும் கவலை அடைய வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X