'நீங்க மட்டும், எப்பவும் அழகாவே இருக்கீங்களே எப்படி?' கிளாமர் ஹீரோயினிடம் கேட்கும் இன்ஸ்டா ஃபேன்ஸ்
மும்பை: நடிகை ஸ்ரத்தா தாஸின் ஹாட் இன்ஸ்டா புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Recommended Video
இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரத்தா தாஸ்.
தெலுங்கில் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, மொகுடு, அட்டா, ஹிப்பி உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம்
இந்தி மற்றும் தெலுங்கில் நடித்து வரும் ஸ்ரத்தாவுக்கு சமீபகாலமாக அதிகப் படங்கள் இல்லை. இதனால் மற்ற ஹீரோயின்களை போல, அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகும். கடந்த சில வாரங்களுக்கு முன் அவர் வெளியிட்ட போட்டோக்கள் கூட அதிகமாக பரவின.

கடினமாக உழைப்பு
இப்போதும் புதிய ஹாட் போட்டோக்களை, தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து இருக்கிறார் ஸ்ரத்தா. இந்த கிளாமர் போட்டோக்களும் வைரலாகி வருகின்றன. அதற்கு முன் பெண்கள் தினத்தை முன்னிட்டு அவர் பதிவு செய்துள்ள போட்டோவில், பெரிய கேப்ஷன் கொடுத்துள்ளார். அதில், வாழ்க்கையில் இப்போது நான் இருக்கும் இடத்தை அடைய, கடினமாக உழைத்திருக்கிறேன்.
ஆதரவு இல்லாமல்
நான் விரும்பும் வழியில் வாழ்கிறேன், மற்றவர்களுக்கு கெடுதல் இல்லாமல், என் விருப்பத்தைச் செயல்படுத்துகிறேன். என் ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு நாளையும் கருணையுடன் எப்படி செலவிட வேண்டும் என்பதை நானே தேர்வு செய்கிறேன். அது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த மகளிர் தினத்தன்று, எந்த ஆதரவும் இல்லாமல் சொந்தமாக நிற்கும் பெண்களை கொண்டாட விரும்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
பசங்க பாவம்
இதை, ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். மற்றொரு போட்டோவில் கிளாமராக அமர்ந்திருக்கிறார் ஸ்ரத்தா. அதைப் பார்த்து ரசிகர்கள் அதிகமாக வழிந்துள்ளனர். சிலர் அவர் அழகை கவிதையாக வர்ணித்துள்ளனர். ஒரு ரசிகர், எப்பவும் அழகாகவே இருக்கீங்களே எப்படி? என்று கேட்டுள்ளார். இன்னொரு ரசிகர் இவ்வளவு கிளாமர் கூடாது. பசங்க பாவம் என்று தெரிவித்துள்ளார். மற்றொருவரும் பார்பி பொம்மை மாதிரி அப்படியே இருக்கீங்க என்று கூறியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் பரவி வருகின்றன.


Click it and Unblock the Notifications











