Don't Miss!
- News
உச்சநீதிமன்றத்துக்கு புதிய 5 நீதிபதிகள்.. மத்திய அரசு ஒப்புதல்.. . யாரெல்லாம் தெரியுமா? முழுவிபரம்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
லுங்கியுடன் தலைவிரி கோலமாய்.. ஸ்ருதிஹாசனை பார்த்து குழம்பும் ரசிகர்கள்!
சென்னை: கேஜிஎஃப் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகத்தை இயக்கி வரும் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் சலார் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஸ்ருதிஹாசன்.
கடைசியாக ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான லாபம் எதிர்பார்த்த வெற்றியையும் வசூலையும் பெற்றுத் தரவில்லை.
கணவருக்காக சாப்பிடாமல் 'கர்வா சவுத்' விரதம் எல்லாம் இருந்த பூனம் பாண்டேவுக்கா இந்த நிலைமை?
தமிழை விடவும் தெலுங்கில் மிகப்பெரிய மார்க்கெட்டை கொண்டுள்ள ஸ்ருதிஹாசன் இப்பொழுது லுங்கியை கட்டிக்கொண்டு தலைவிரி கோலமாய் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

தெலுங்கில் அதிக திரைப்படங்களில்
மிகப் பெரிய திரைக் குடும்பத்தில் பிறந்த நடிகை ஸ்ருதிஹாசன் இப்பொழுது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் முதல் முறையாக ஹிந்தியில் நடித்து அறிமுகம் செய்யப்பட்டார். இப்போது தென்னிந்திய மொழிகளில் முழு கவனத்துடன் படங்களில் நடித்து வரும் ஸ்ருதிஹாசனுக்கு தமிழை விடவும் தெலுங்கில் அதிக திரைப்படங்கள் குவிகிறது.

வசூலில் பட்டையைக் கிளப்பியது
தெலுங்கில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்று வருவதால் இவரை படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு உள்ளனர். ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடித்த கிராக் திரைப்படம் சமீபத்தில் வசூலில் பட்டையைக் கிளப்பியது. மேலும் பவன் கல்யாணுக்கு ஜோடியாக வக்கீல் சாப் என்ற படத்திலும் நடித்திருந்தார்.
Recommended Video

துடிப்பான நடிப்பு
தமிழில் அளவான படங்களில் மட்டும் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன் விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக இணைந்து லாபம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான லாபம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. ஆனால் ஸ்ருதிஹாசனின் துடிப்பான நடிப்பு படம் முழுவதும் நிறைந்திருந்தது.

முழுவதும் ஆக்ஷன் கதை களத்தில்
கே ஜி எஃப் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் அதன் அடுத்த பாகம் கேஜிஎஃப் சாப்டர் 2 பல மடங்கு பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். கே ஜி எஃப் 2 இப்பொழுது இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் சூழலில் அடுத்த படத்தில் பாகுபலி பிரபாஸ் ஹீரோவாக நடித்து வருகிறார். முழுவதும் ஆக்ஷன் கதை களத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு சலார் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் காட்டுப் பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

லுங்கியுடன் தலைவிரி கோலமாய்
இவ்வாறு தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஸ்ருதிஹாசன் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் இப்பொழுது வித்தியாசமான காஸ்ட்யூமில் வெளியிட்டுள்ள புகைப்படமும் வைரலாகி வருகிறது. அதில் வெறும் லுங்கியுடன் தலைவிரி கோலமாய் ஸ்ருதிஹாசன் எடுத்த க்யூட் புகைப்படங்கள் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.