நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் இதுதான்... ஸ்ருதி ஹாசன் டிவிட்ட பாத்தீங்களா?

சென்னை: தான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் இதுதான் என தனது சமூக வலைதள பக்கத்தில் மனம் திறந்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.

தமிழ் சினிமாவின் பிரபல வாரிசு நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ருதி ஹாசன். நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் 2000ஆம் ஆண்டு வெளியான ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர்.

தொடர்ந்து பாலிவுட்டில் 2009 ஆம் ஆண்டு வெளியான லக் படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். பின்னர் 2011ஆம் ஆண்டு அனகனக ஓ தீருது படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் தடம் பதித்தார் ஸ்ருதி ஹாசன்.

முன்னணி நடிகையாக

முன்னணி நடிகையாக

அதே ஆண்டு தமிழில் நடிகர் சூர்யாவுடன் 7ஆம் அறிவு படத்தில் நடித்து தமிழிலும் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ஸ்ருதி ஹாசன். தொடர்ந்து பாலிவுட், தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

காதல் சர்ச்சைகள்

காதல் சர்ச்சைகள்

முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா இப்படி அனைவருடனும் நடித்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன், பின்னணி பாடகியாகவும் உள்ளார். காதல் சர்ச்சைகளில் சிக்கி அவ்வப்போது செய்திகளிலும் அடிபட்டு வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

காதலருடன் போட்டோக்கள்..

காதலருடன் போட்டோக்கள்..

ஏற்கனவே இரண்டு காதல் தோல்விகளை சந்தித்துள்ள ஸ்ருதி ஹாசன் தற்போது, டூடுல் கலைஞர் ஒருவரை காதலித்து வருகிறார். காதலருடன் மும்பையில் வசித்து வரும் ஸ்ருதி ஹாசன், அவ்வப்போது தனது காதலருடன் இருக்கும் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு இணையத்தை திணறடித்து வருகிறார்.

ஸ்ருதி ஹாசன் டிவிட்

ஸ்ருதி ஹாசன் டிவிட்

இருவரும் வொர்க் அவுட் செய்யும் வீடியோ, ஒன்றாக சாப்பிடும் வீடியோ, ஷாப்பிங் பண்ணும் வீடியோ என விதவிதமாக வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் ஷேர் செய்துள்ள டிவிட் ஒன்று வைரலாகி வருகிறது.

கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம்

கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம்

அந்த டிவிட்டில் ஸ்ருதி ஹாசன் பதிவிட்டிருப்பதாவது, நான் ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்கிறேன், மேலும் நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்பதுதான். உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நீங்கள் நினைக்கும்போது வீடியோ கேம் போல நீங்கள் மீண்டும் ஒரு நிலைக்குச் செல்கிறீர்கள்... லெவல் அப். ஈகோவை குறைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு பாடம் இருக்கிறது.. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

Bigg Boss 5 ல நான் Surprise Entry கொடுப்பேனா ? | Actress Amritha Aiyer Exclusive | Filmibeat Tamil
 ரசாயன மாற்றங்கள்தான் காரணம்

ரசாயன மாற்றங்கள்தான் காரணம்

இதனை பார்த்த ரசிகர்கள் இவை அனைத்தும் நம் மூளையில் நடைபெறும் ரசாயன மாற்றங்கள்தான்... அது உங்களின் கான்செப்ட் அல்ல... என பதில் தெரிவித்து வருகின்றனர். நடிகை ஸ்ருதி ஹாசன், தற்போது கன்னடம் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் சலார் படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்து.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X