»   »  வயசானாலும் அழகும், ஸ்டைலும் + சிம்ரனும் இன்னும் மாறவே இல்லையே!

வயசானாலும் அழகும், ஸ்டைலும் + சிம்ரனும் இன்னும் மாறவே இல்லையே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் மீண்டும் நாயகியாக ரீஎண்ட்ரி கொடுத்திருக்கும் நடிகை சிம்ரன், அதற்கென தனியே போட்டோஷூட் ஒன்றையும் நடத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்த சிம்ரனுக்கு, திருமணத்திற்குப் பின் சொல்லிக் கொள்ளும்படி படங்கள் அமையவில்லை.

சமீபத்தில் திரிஷா இல்லண்ணா நயன்தாரா படத்தில் அவரது கேரக்டர் பேசப்பட்டது.

கரையோரம்...

கரையோரம்...

அதனைத் தொடர்ந்து கரையோரம் என்ற படத்தை அவரே தயாரித்து, நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு போலீஸ் வேடம்.

பேய்ப்படம்...

பேய்ப்படம்...

இது தவிர அறிமுக இயக்குநர் பாலா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் சிம்ரன். பேய்ப் படமான இதில், இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்கிறார் சிம்ரன்.

புதிய போட்டோஷூட்...

புதிய போட்டோஷூட்...

இந்நிலையில், புதிய போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் சிம்ரன். இதில், பிரபல புகைப்படக்கலைஞர் சுபா, சிம்ரனை விதவிதமாக அழகாக புகைப்படங்களாக எடுத்துள்ளார்.

7 செட்...

7 செட்...

தண்ணீரை மையப்படுத்தி இந்தப் போட்டோஷூட் நடத்தப்பட்டுள்ளது. இதற்கென 7 செட்கள் போடப்பட்டதாம்.

தண்ணீரை மையப்படுத்தி...

தண்ணீரை மையப்படுத்தி...

இதுவரை தண்ணீரை மையப்படுத்தி யாரும் அவ்வளவாக போட்டோஷூட் நடத்தியதில்லை என்பதால், இந்த வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டாராம் சிம்ரன்.

பூவுடன்...

பூவுடன்...

இதன் ஒவ்வொரு புகைப்படத்திலும் தண்ணீர் மற்றும் பூ தவறாமல் இடம் பெற்றிருக்கிறது. விதவிதமான கெட்டப்புகளில் அழகாக ஜொலிக்கிறார் சிம்ரன்.

மஞ்சள் தேவதை...

மஞ்சள் தேவதை...

தற்போது எடுக்கப்பட்டுள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான், இதுவரை எடுக்கப்பட்டதிலேயே தனக்கு மிகவும் பிடித்தமானவை எனத் தெரிவித்துள்ளார் சிம்ரன்.

சவாலான போட்டோஷூட்...

சவாலான போட்டோஷூட்...

வித்தியாசமான களம் என்ற போதும், பாதி தண்ணீரில் மூழ்கியவாறு, உடலை விறைப்பாக வைத்துக் கொண்டு போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தது கொஞ்சம் சவாலானதாக இருந்ததாகவும் சிம்ரன் கூறியுள்ளார்.

உங்களுக்கு சவால்.. உங்களது ரசிகர்களுக்கு சந்தோஷம்!

English summary
Actress Simran has made a photoshoot for her reentry in Tamil cinema.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil