Don't Miss!
- News
பிராமணர் என்பதற்காகவே வெறுப்பதா? இதுவும் தீண்டாமைதான் - இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆதங்கம்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Sports
இந்திய அணிக்கு அடித்த செம லக்.. மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்.. பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அட சிம்ரன் பெயருக்கு இப்படி ஒரு அர்த்தமா? … இத்தனை நாள் இது தெரியாம போச்சே !
சென்னை : தமிழ் சினிமாவில் 90களில் இடையழகி என பெயர் எடுத்தவர் சிம்ரன். கையை தூக்கி இடையை குலுக்கி ஆட்டம்போட்டாலே போதும் அத்தனை இளசுகளும் க்ளோஸ்.
சிம்ரன் தன்னுடைய நடனத்தாலும், நடிப்பாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதுமட்டுமல்லாமல் தன் அழகினாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர்.
ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களில் ஜோடி போட்டு நடித்துள்ள சிம்ரனின் பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் கார் இறக்குமதி விவகாரம்...அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்ய அரசு கோரிக்கை

சிம்ரன் அறிமுகம்
மும்பையை பூர்வீகமாக கொண்ட சிம்ரன், சிவாஜி, விஜய் நடித்த ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.தொடர்ந்து, பூச்சூடவா, விஐபி, நேருக்குநேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.

லேடி சூப்பர் ஸ்டார்
சிம்ரன் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்கள் என்றாலும் சரி, கவர்ச்சி கதாபாத்திரங்கள் என்றாலும் சரி எல்லா கதாபாத்திரங்களிலும் பட்டையை கிளப்புவார். அப்போதைய லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது சிம்ரன் தான். இப்போது அந்த இடத்தை நயன்தாரா பிடித்துள்ளார்.

முதல்படம்
நான் மும்பையில் கல்லூரியில் நடித்து முடித்துவிட்டு ஜெயா பச்சன் அவர்களை சந்தித்தேன் அப்போது தான் எனக்கு தேரே மேரே சப்னே திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அப்படி தான் சினிமா பயணம் தொடங்கியது என்றார்.

அப்பாசுடன் கிசுகிசு
சிம்ரன் பீக்கில் இருந்த போது அப்பாசுடன் கிசுகிசுக்கப்பட்டு பேசப்பட்டது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள சிம்ரன், இது உண்மை இல்லை நானும் அப்பாசும் சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்பிருந்தே நல்ல நண்பர்கள் என்றார். நிறைய படத்துல நடிக்கனும், அதன் பிறகு கல்யாணம் பண்ணிக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
Recommended Video

மகான் படத்தில்
அதேபோல 2003ம் ஆண்டு தனது சிறு வயது நண்பரான தீபக்கை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அதீப் ஓடோ, அதிதீ வீர் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நடிகை சிம்ரன் சமீபத்தில் ஓடிடியில் வெளியான மகான் திரைப்படத்தில் விக்ரமின் மனைவியாக நடித்திருந்தார்.