»   »  'படப்பிடிப்பில் சிம்ரனுக்காக காத்திருந்த அஜீத்'... சிம்ரன் பிறந்தநாள் ஸ்பெஷல்

'படப்பிடிப்பில் சிம்ரனுக்காக காத்திருந்த அஜீத்'... சிம்ரன் பிறந்தநாள் ஸ்பெஷல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவராகத் திகழும் அஜீத், படப்பிடிப்பில் சிம்ரனுக்காக காத்திருந்தார் என்று சொன்னால் நம்புவீர்களா?

ஆனால் அதுதான் உண்மை. 'அவள் வருவாளா' படப்பிடிப்பு சமயத்தில் அஜீத் உள்ளிட்ட மற்ற நடிக, நடிகையர் குறித்த நேரத்தில் படப்பிடிப்பிற்கு வந்து விடுவார்களாம்.

பிஸியான கால்ஷீட் காரணமாக கிடைக்கும் நேரங்களில் சிம்ரன் வந்து நடித்துக் கொடுத்துவிட்டு போவாராம்.

ஒன்ஸ்மோர்

ஒன்ஸ்மோர்

நேருக்கு நேர் படத்தில் சூர்யாவின் ஜோடியாக அறிமுகமான சிம்ரனை, முந்திக்கொண்டு தமிழில் அறிமுகம் செய்த படம் ஒன்ஸ்மோர். இதில் கவிதாவாக விஜய்யைக் கொலை செய்யவந்து, பின்னர் அவரின் காதலியாக சிம்ரன் மாறுவார். சிவாஜி கணேசன், சரோஜாதேவி போன்றவர்களுக்கு ஈடாக இப்படத்தில் சிம்ரனின் நடிப்பு பேசப்பட்டது.மேலும் ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், விஐபி என்று சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளை 3 முறை தொடர்ச்சியாக சிம்ரன் வென்றார்.

அவள் வருவாளா

அவள் வருவாளா

அஜீத்திற்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த 'அவள் வருவாளா' படத்தில் சிம்ரனின் நடிப்பும், அவரது கதாபாத்திரமும் ரசிகர்களை 'திவ்யா, திவ்யா' என்று அந்நாளிலேயே உருக வைத்தது. நேசம், ராசி, ரெட்டை ஜடை வயசு, பகைவன், உல்லாசம் என்று தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த அஜீத் இந்தப் படத்திற்குப் பின்தான் மீண்டும் பார்முக்கு திரும்பினார்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

இயக்குநரும், நடிகருமான ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியில் 'அவள் வருவாளா' படப்பிடிப்பு குறித்த விவரங்களை பகிர்ந்து கொண்டார். அதில் சிம்ரன் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காரணத்தால், அவருக்கு நேரம் கிடைக்கும் போது வந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார். ஒருநாளில் 4 மணி நேரங்கள் கூட தொடர்ச்சியாக நடித்திருக்கிறார். சமயங்களில் அவர் வருவதற்காக நாங்கள் காத்திருப்போம் என்று தெரிவித்துள்ளார். அந்தளவுக்கு சிம்ரனின் கால்ஷீட் நிரம்பி வழிந்தது.

விஜய்

விஜய்

ஒன்ஸ்மோர், துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, உதயா, நேருக்கு நேர் போன்ற படங்களில் விஜய்க்கு ஈடாக, சிம்ரன் நடித்திருப்பார். அதிலும் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் 'ருக்கு'வாகவே சிம்ரன் வாழ்ந்திருப்பார். கடைசியாக யூத் படத்தில் 'ஆல் தோட்ட பூபதி' பாடலுக்கு விஜய்யுடன் இணைந்து சிம்ரன் ஆடியிருந்தார். நடனத்தில் விஜய் சிறந்தவர் என்று எல்லோருக்குமே தெரியும். ஆனால் சிம்ரனுக்கு நிகராக ஆடுவது கடினம் என ஒரு பேட்டியில் விஜய்யே கூறியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அஜீத்

அஜீத்

வாலி, அவள் வருவாளா, உன்னைக் கொடு என்னைத் தருவேன் என 3 படங்களில் அஜீத்-சிம்ரன் ஜோடி இணைந்து நடித்திருக்கிறது. இதில் உன்னைக் கொடு என்னைத் தருவேன் சுமாராக ஓட, வாலி, அவள் வருவாளா இரண்டும் பிளாக்பஸ்டர் படங்களாக மாறின. அதிலும் வாலியில் இடம்பெற்ற 'நிலவைக் கொண்டுவா' பாடலில் சிம்ரனின் போட்ட ஆட்டத்தை இன்னும் தமிழ் ரசிகர்கள் மறக்கவில்லை. விஜய் போலவே அஜித்தும் ஒரு பேட்டியில் வாலி படத்தின்போது சிம்ரனின் நடிப்பைக் கண்டு தான் வியந்ததாக கூறியிருக்கிறார்.

கமல்ஹாசன், சரத்குமார்

கமல்ஹாசன், சரத்குமார்

அஜீத், விஜய் மட்டுமின்றி கமல், சரத்குமார், விஜயகாந்த் போன்ற மூத்த நடிகர்களுடனும் சிம்ரன் போட்டிபோட்டு நடித்திருந்தார். பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம் படங்களில் கமலுடன் சரிசமமாக காமெடியில் கலக்கியிருந்தார். நட்புக்காக, அரசு போன்ற படங்களில் சரத்குமாருடனும், கண்ணுபடப் போகுதய்யா, ரமணா போன்ற படங்களில் விஜயகாந்துடனும் சிம்ரன் நடித்திருக்கிறார்.

பார்த்தாலே பரவசம்

பார்த்தாலே பரவசம்

உச்சத்தில் இருந்த காலகட்டத்திலும் 'பார்த்தாலே பரவசம்' படத்தில் எதிர்மறையான வேடத்தில் நடித்திருந்தார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் 9 வயது குழந்தையின் அம்மாவாக நடித்த சிம்ரனின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

சந்திரமுகி

சந்திரமுகி

உச்ச நடிகையாக திகழ்ந்த போதும் ரஜினியுடன் சிம்ரன் ஒரு படத்தில் கூட சேர்ந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு சிம்ரனுக்கு கிடைத்தும், சூழ்நிலை காரணமாக அவரால் அப்படத்தில் நடிக்க முடியவில்லை.

வாரணம் ஆயிரம்

வாரணம் ஆயிரம்

முதல் பட நாயகனான சூர்யாவுடன் இணைந்து 'வாரணம் ஆயிரம்' மூலம் தமிழ் சினிமாவில் தனது 2 வது இன்னிங்ஸை சிம்ரன் தொடங்கினார். தற்போது 'சிம்ரன் & சன்ஸ்' என்னும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். சமீபத்தில் வெளியான திரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் சிம்ரன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்னும் எத்தனை வருடங்கள் போனாலும், சிம்ரன் என்னும் பெயர் தமிழ் சினிமாவில் எங்காவது ஒலித்துக் கொண்டுதான் இருக்கும் எனத் தோன்றுகிறது.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிம்ரன்!

English summary
Today Actress Simran Celebrating Her 40th Birthday. From thatsTamil and all our Readers around the world, wishing this marvelous actor a wonderful birthday ahead.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil