Don't Miss!
- Lifestyle
உங்க பிறப்புறுப்பில் மீன் நாற்றம் அடிக்குதா? அப்ப உங்களுக்கு இந்த பாலியல் பிரச்சனைகள் இருக்க வாய்பிருக்காம்!
- News
ச்சே! 30 அடி உயரத்திலிருந்து குழந்தைகளை வீசிய.. கொலைகார அப்பா! 2 தம்பிகளை துணிச்சல்களாக காத்த சிறுமி
- Sports
ஆசிய கோப்பை பஞ்சாயத்திற்கு தீர்வு.. பாக். வாரிய தலைவர் கொடுத்த புதிய அப்டேட்.. ஃபிப்.4 தான் கடைசி
- Automobiles
தாலிபான்கள் உருவாக்கிய முதல் சூப்பர் கார்... உலக நாடுகளையே மூக்குமேல விரல வைக்க வச்சுட்டாங்க!
- Technology
டேட்டா லிமிட்டே கிடையாது.. எவ்ளோ வேணா யூஸ் பண்ணிக்கலாம்.. ரூ.400-க்குள் கிடைக்கும் BSNL-ன் சூப்பர் ரீசார்ஜ்!
- Finance
நிறுவனங்கள் உங்கள் குடும்பமல்ல.. நீங்கள் குடும்ப உறுப்பினருமல்ல.. இனி பணத்துக்காக வேலை பாருங்கள்!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
ஜிம்மில் வெறித்தனமான உடற்பயிற்சியில் மாஸ் காட்டும் நடிகை சினேகா!
சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை சினேகா இப்பொழுது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் அம்மாவாக நடித்து அனைவரையும் கலங்க வைத்திருந்த இவர் இப்பொழுது துல்கர் சல்மானின் நடிப்பில் உருவாகி வரும் வான் படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வரும் சினேகா இப்பொழுது வெறித்தனமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அனைவரையும் மிரள வைத்துள்ளார்.
ஊசியை பார்த்து பயந்த சினேகா…. பிரசன்னா பகிர்ந்த காமெடி வீடியோ!

புன்னகை அரசியாக
நடிகை சினேகாவை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது அந்த அளவிற்கு பார்க்கும்போதே பக்கத்து வீட்டு பெண் போல தோன்றும் முக லட்சணம், அலட்டிக் கொள்ளாத இயல்பான நடிப்பு புன்னகையாலே அனைவரையும் வசியம் செய்யும் கொள்ளை அழகு என தமிழ் சினிமாவின் புன்னகை அரசியாக வலம் வந்த நடிகை சினேகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். மாதவன் உடன் இணைந்து நடித்த என்னவளே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான சினேகாவுக்கு அடுத்தடுத்த படங்கள் ஹிட்டாக தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

ஆட்டோகிராஃப்
துளியும் கவர்ச்சி காட்டாமல் நடிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்டிருந்த நடிகை சினேகா தமிழைத் தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் பட்டையைக் கிளப்பினார். புன்னகை தேசம், உன்னை நினைத்து, ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, விரும்புகிறேன், ஏப்ரல் மாதத்தில், வசீகரா, வசூல்ராஜா எம்பிபிஎஸ்,ஆட்டோகிராஃப் என எண்ணற்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சினேகா திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து சற்று விலகி இருந்தார்.
Recommended Video

அடிமுறை தற்காப்பு கலை
இப்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கிய சினேகா கடைசியாக தனுஷ் இரட்டை வேடத்தில் கலக்கிய பட்டாஸ் திரைப்படத்தில் தனுஷின் அம்மாவாக நடித்து அனைவரையும் வியக்க வைத்து இருந்தார். எதிர்நீச்சல், கொடி ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான பட்டாஸ் திரைப்படம் பாரம்பரியமான அடிமுறை என்ற தற்காப்பு கலையை மையப்படுத்தி உருவாகி இருக்க இதில் சினேகாவும் சண்டைக்காட்சிகளில் பிரமாதப் படுத்தியிருப்பார். அதற்காக தனியாக அடிமுறை தற்காப்பு பயிற்சியும் எடுத்துக் கொண்டார்.

ஜிம்மில் வெறித்தனமாக உடற்பயிற்சி
இப்பொழுது அறிமுக இயக்குனர் ஆர் கார்த்திக் இயக்கத்தில் துல்கர் சல்மான், ரிது வர்மா இருவரும் இணைந்து நடித்து வரும் வான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க உடலை தயார் செய்து வருகிறார். அதற்காக இப்பொழுது ஜிம்மில் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அனைவரையும் மிரள வைத்துள்ளார்.
-
Varisu Box Office: 13 நாட்களில் வாரிசு படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா? தூள் கிளப்புறாரே!
-
அதிர்ச்சி.. இயக்குநரும் குணசித்திர நடிகருமான ராமதாஸ் மாரடைப்பால் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்
-
அதுக்குதான கொடுக்குறாங்க துட்டு... பாக்ஸ் ஆபிஸ் கவலை ரசிகர்களுக்கு எதுக்கு..?: விளாசிய ஆர்ஜே பாலாஜி