»   »  கவர்ச்சி நடிகை சோனா இஸ் பேக்!

கவர்ச்சி நடிகை சோனா இஸ் பேக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சர்ச்சைகளுக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லாதவர் கவர்ச்சி நடிகை சோனா. தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக அதிர்ச்சி அணுகுண்டை வீசியவர் கொஞ்சநாள் ஆளைக் காணோம்.

அப்புறம், நமீதா தன்னைப் பாராட்டவில்லை எனப் பேட்டிகளில் சொல்லிப் பஞ்சாயத்தாகி, நமீதா சோனாவைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

சில வருடங்களாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த நடிகை சோனா தற்போது 7 கிலோ எடையைக் குறைத்து, மீண்டும் நடிக்க வருகிறார்.

கவர்ச்சி நடிகை :

கவர்ச்சி நடிகை :

'பத்துக்கு பத்து', 'குரு என் ஆளு', 'குசேலன்', 'கோ' உள்பட பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர், சோனா. இவர் ஜெய் நடிப்பில் 'கனிமொழி' என்ற படத்தைச் சொந்தமாக தயாரித்தார். மலையாள சினிமாவிலும் பிரபலமானவர் சோனா.

தேவி சோனா :

தேவி சோனா :

சில வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டு விலகியவர் உடம்பு முழுக்க காவிச் சேலையைச் சுற்றிக்கொண்டு ஆன்மீக வடிவுக்கு மாறினார். தனது பெயரையும் தேவி சோனா என மாற்றிக்கொண்டதாகக் கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

ஆண்கள் சங்கம் விவகாரம் :

ஆண்கள் சங்கம் விவகாரம் :

'ஆண்கள் டிஷ்யூ பேப்பரைப் போல... தேவைகள் நிறைவேறியபின் தூக்கி எறிந்துவிட வேண்டும்' என ஒருமுறை இவர் பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. ஆண்கள் சங்கம் சார்பில் சோனாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மீண்டும் வருகிறார் சோனா :

மீண்டும் வருகிறார் சோனா :

தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் ஒரு க்ரைம் த்ரில்லர் படத்துக்காக தனது உடல் எடையை 7 கிலோ குறைத்திருக்கிறார் சோனா. இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் சோனா.

போலீஸ் வேடம் :

போலீஸ் வேடம் :

சோனா போலீஸாக நடிப்பது இதுவே முதல்முறை. இந்தப் படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படமாகத் தயாராகிறது. புது இயக்குநர் ஒருவர் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக சோனா சண்டைப் பயிற்சிகளையும் கற்றுவருகிறாராம்.

Read more about: sona, actress, சோனா
English summary
Actress Sona has lost 7 kg for a bilingual crime thriller. She will be seen as a police officer in that movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil