»   »  மழையால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவிட 'ரைஸ் பவுல் சேலஞ்ச்' தொடங்கிய சோனா

மழையால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவிட 'ரைஸ் பவுல் சேலஞ்ச்' தொடங்கிய சோனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 'ரைஸ் பவுல் சேலஞ்ச்' என்ற புதிய அமைப்பை அதன் மூலமாக உதவி செய்ய முன்வந்திருக்கிறார் நடிகை சோனா.

கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் பகுதிகள் அதிகமாகப் பாதிப்படைந்து இருக்கின்றன.

இந்நிலையில் நடிகை சோனா மழையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவி செய்ய முன்வந்திருக்கிறார்.

தமிழகத்தைப் பாதித்த மழை

தமிழகத்தைப் பாதித்த மழை

கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான கனமழை பெய்து வருகிறது. திடீரென்று பெய்த அதிக மழையால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் பகுதிகளில் அதிக சேதத்தை மழை ஏற்படுத்தி இருக்கிறது.

களத்தில் குதித்த பிரபலங்கள்

களத்தில் குதித்த பிரபலங்கள்

மத்திய, மாநில அரசுகளின் உதவியோடு தமிழ்நாட்டில் உள்ள பிரபலமானவர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஷால் மற்றும் தனுஷ் ஆகியோர் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற பணத்தை வழங்கி இருக்கின்றனர்.

சோனா

நடிகர்களைத் தொடர்ந்து நடிகை சோனாவும் தற்போது வெள்ள நிவாரண நிதிக்கு உதவிகள் செய்ய முன்வந்திருக்கிறார். இவர் கடந்த வாரம் சமூக வலைதளங்கள் மூலமாக மக்களுக்கு உதவிகள் புரியுமாறு கோரிக்கைகள் விடுத்தார். இதற்காக அவர் ரைஸ் பவுல் சேலஞ்ச் என்ற ஒரு அமைப்பையும் தொடங்கினார்.

விஷால் மூலமாக

விஷால் மூலமாக

இவரின் கோரிக்கைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதுவரை சுமார் 1500 கிலோ அரிசி, பிஸ்கட், டூத் பிரஷ்கள் போன்றவை இந்த ரைஸ் பவுல் சேலஞ்ச் மூலமாக பெறப்பட்டுள்ளது. இந்தப் பொருட்களை நடிகர் விஷாலின் ரசிகர் மன்றங்கள் மூலமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேர சோனா வழிவகை செய்திருக்கிறார்.

சோனாவின் இந்த முயற்சிக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Sona Now Starts Rice Bowl Challenge. She wrote on Twitter "Be that small seed of happiness for the poor and needy and lost,I am willing to help you to help others, come join this moment".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil