ஷூட்டிங் ஸ்பாட்டில் தாய்ப்பால் கொடுத்த தனுஷ் பட நடிகை.. தீயாய் பரவும் புகைப்படம்!

சென்னை: நடிகர் தனுஷ் உடன் ராஞ்சனா படத்தில் நடித்த நடிகை சோனம் கபூர் தனது மகனுக்கு பாலூட்டும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வேலைக்கு செல்லும் பெண்கள், எந்தவொரு தயக்கமும் இன்றி குழந்தைகளுக்கு தேவையான போஷாக்கு இருக்கும் தாய்ப்பாலை கொடுக்க கூச்சப்படக் கூடாது என பல இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடிகை சோனம் கபூரும் அப்படியொரு முன்னெடுப்பை எடுத்துள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

அனில் கபூர் மகள்

அனில் கபூர் மகள்

பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளும் இந்தி பட நடிகையுமான சோனம் கபூர் திருமணத்துக்கு பிறகு மீண்டும் சினிமாவில் பிசியாகி உள்ளார். பிரபல தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்த அவர், 4 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு கர்ப்பமாகி குழந்தையை பெற்றுள்ளார்.

தனுஷ் ஹீரோயின்

தனுஷ் ஹீரோயின்

நடிகர் தனுஷ் இந்தியில் அறிமுகமான ராஞ்சனா/அம்பிகாபதி படத்தில் ஹீரோயினாக நடித்து மிரட்டிய சோனம் கபூர் பாலிவுட்டி ஏகப்பட்ட படங்களில் நடித்து கெத்துக் காட்டி வருகிறார். ரெஜினா கசாண்ட்ராவுடன் இணைந்து லெஸ்பியன் படத்தில் நடித்து ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு அளித்த சோனம் கபூர் தற்போது தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தாய்ப்பால் விழிப்புணர்வு

தாய்ப்பால் விழிப்புணர்வு

பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் மேக்கப் ரூமில் அத்தனை பேர் சூழ்ந்திருக்கும் போதே தனது மகன் வாயு கபூருக்கு தாய்ப்பால் கொடுத்த புகைப்படத்தை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். பெண்கள் தங்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது குறித்து கூச்சப்படக் கூடாது என பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், சோனம் கபூரும் அந்த வரிசையில் இணைந்துள்ளார்.

தீயாய் பரவும் புகைப்படம்

தீயாய் பரவும் புகைப்படம்

மேக்கப் போட்டுக் கொண்டே தனது மகன் வாயு கபூருக்கு நடிகை சோனம் கபூர் பால் கொடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டா ரீலில் வெளியிட்ட நிலையில், அதில் இருந்த அந்த போட்டோவை மட்டும் எடுத்து சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து டிரெண்ட் ஆக்கி வருகின்றனர். மேலும், சோனம் கபூரின் செயலுக்கு ஏகப்பட்ட பிரபலங்களும், ரசிகர்களும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X