அடேங்கப்பா...உதவியாளரை அலேக்காக தூக்கி இப்படி ஒரு ஒர்க் அவுட்டா...அசத்திய ஸ்ரேயா ரெட்டி
சென்னை : விஜே.,வாக இருந்து நடிகையாக மாறியவர் ஸ்ரேயா ரெட்டி. விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் சிறிய ரோலில் நடித்து சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தார் ஸ்ரேயா ரெட்டி.
Recommended Video
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ள ஸ்ரெயா ரெட்டி, சாமுராய் படத்திற்கு பிறகு திமிரு படத்தில் வில்லியாக நடித்து என்ட்ரி கொடுத்தார். திமிரு படத்தில இவர் நடித்த ரோலை யாரும் மறக்க முடியாது.
பாவாடை தாவணியில் மதுரை பெண் தாதாவாக நடித்து அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார் ஸ்ரெயா. தற்போது வரை டாப் 10 தமிழ் பட வில்லிகள் பட்டியலில் ஸ்ரெயா ரெட்டிக்கு முக்கியமான இடம் நிச்சயம் உண்டு. வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம் ஆகிய படங்களில் நடித்து பல விருதுகளையும் வென்றார்.

விஷாலின் அண்ணி
2008 ம் ஆண்டு நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகு கணவருடன் இணைந்து சில படங்களை தயாரித்தார். கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சில சமயங்களில் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார்.

சுழல் ரெஜினாவை மறக்க முடியுமா?
சமீபத்தில் வெளியான சுழல் வெப்சீரியல் போலீஸ் அதிகாரி ரோலில் நடித்து பட்டையை கிளப்பினார். இவரின் தத்ரூபமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தற்போது இவர் நீண்ட காலமாக நடித்து வரும் அண்டாவ காணோம் படத்தின் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

அசத்தும் ஒர்க்அவுட் வீடியோ
சினிமாவுடன் சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா ரெட்டி, தொடர்ந்து தனது ஒர்க்அவுட் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஹீரோக்களையே மிஞ்சும் அளவிற்கு இவர் பதிவிடும் ஒர்க்அவுட் வீடியோக்களுக்கு தனி ஃபேன்ஸ் உண்டு.

அலேக்காக தூக்கிட்டாரே
ஸ்ரேயா ரெட்டி தற்போது விடுமுறையை கழிக்க பாரிஸ் சென்றுள்ளார். அங்கு கிளாமர் போட்டோக்களை அதிகம் பகிர்ந்து வந்தவர். இன்று, தனது பெண் உதவியாளரை அலேக்காக தோளில் தூக்கியபடி சிட் அப்ஸ் போடடுள்ள வீடியோவை வெளியிட்டு அனைவரையும் அசர வைத்துள்ளார்.அதிகமானவர்கள் பல நாட்களாக கேட்ட இந்த ஒர்க்அவுட்டை இன்று முயற்சி செய்து பார்த்தாக கேப்ஷன் பதிவிட்டுள்ளார் ஸ்ரேயா.

சூப்பர் ஸ்டிராங் லேடி
படங்களில் ஹீரோக்கள் தான் ஹீரோயினை இப்படி தூக்கி பண்ணுவார்கள். ஆனால் ஸ்ரேயா ரெட்டி இப்படி செய்துள்ளதை பலரும் ஆச்சரியப்பட்டு, கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. செம ஸ்டிராங், சூப்பர் ஸ்டிராங் என பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











