Don't Miss!
- News
"கொடூரத்தின் உச்சம்.." அரசு வேலைக்காக 5 மாத பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்ற பெற்றோர்! பயங்கரம்
- Automobiles
சட்டபடி இது தப்புங்க! ஆட்டோ எக்ஸ்போவில் தில்லாக காட்சியளித்த மாடிஃபைடு கார்கள்... எல்லாமே செம்ம அழகா இருக்கு!
- Lifestyle
Today Rasi Palan 25 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு முதலீடும் செய்வதைத் தவிர்க்கவும்...
- Finance
Budget 2023: பட்ஜெட்டில் இப்படி ஒரு சர்பிரைஸ் கிடைக்குமா.. தங்கம் இறக்குமதியாளர்களுக்கு வாய்ப்பு?
- Sports
பந்துவீச்சில் மாற்றம் செய்தேன்.. இரட்டிப்பாக உழைப்பதில் மகிழ்ச்சி.. டி20 தொடருக்கு ரெடி - ஹர்திக்
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
51 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க அந்த நடிகர்தான் காரணம்... மனம் திறந்த நடிகை தபு!
மும்பை: 51 வயதாகியும் தான் இன்னும் திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணத்தை நடிகை தபு மனம் திறந்து கூறியுள்ளார்.
பாலிவுட்டில் கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான பஜார் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை தபு. இந்தப் படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் தபு.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு
பத்ம
விபூஷன்
விருது
வழங்கப்பட்டது
!
தொடர்ந்து பல்வேறு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். 1994ஆம் ஆண்டு வெளியான விஜய்பாத் என்ற படத்தில் லீடிங் ரோலில் நடித்தார் தபு. இந்த படத்தில் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதை பெற்றார் நடிகை தபு.

தபுவின் தமிழ் படங்கள்
தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிஸியானார் நடிகை தபு. தமிழில் காதல் தேசம் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார் நடிகை தபு. தமிழில் இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், சினேகிதியே, டேவிட் ஆகிய படங்களில் நடித்துள்ளார் தபு.

51 வயதான நடிகை
தற்போதும் இந்தி, தெலுங்கு, மலையாளம், இங்கிலிஷ் என பல மொழி படங்களில் பிஸியாக உள்ளார் நடிகை தபு. 51 வயதான நடிகை தபு, இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தபு தெலுங்கு சினிமாவில் பிஸியாக இருந்த போது நடிகர் நாகார்ஜூனாவும் தபுவும் காதலிப்பதாக தகவல் பரவியது.

ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை?
பின்னர் அந்த காதல் முறிந்துவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் 51 வயதாகியும் தான் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறித்து நடிகை தபு மனம் திறந்து பேசியுள்ளார். அதில் தனக்கு திருமணம் நடக்காமல் போனதற்கு காரணம் நடிகர் அஜய் தேவ்கன் தான் என்று கூறியுள்ளார்.

என் சகோதரரின் நண்பர்
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, எனக்கு ஆரம்பத்தில் இருந்தே அஜய் தேவ்கனை தெரியும். எனது சகோதரனுக்கு அவர் நெருங்கிய நண்பர். நாங்கள் மும்பை ஜுஹூ பகுதியில் வசித்தோம். அப்போது எனது ஒவ்வொரு செயலையும் அஜய் தேவ்கன் கவனித்துக்கொண்டே இருப்பார்.

மற்ற ஆண்களுடன் சண்டை போடுவார்
நான் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து வருவார். வேறு ஆண்களுடன் நான் பேசுவது அவருக்கு பிடிக்காது. யாரிடமாவது நான் பேசினால் அந்த ஆண்களுடன் சண்டை போடுவார். அதனால்தான் நான் திருமணம் செய்து கொள்ளாமல் அப்படியே இருந்துவிட்டேன்" என்று கூறியுள்ளார்.

கஜோல் காதல் திருமணம்
நடிகர் அஜய் தேவ்கனும் நடிகை தபுவும் விஜய் பத், கோல் மேன் அகெய்ன், திரிஷ்யம், போன்ற படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். அஜய் தேவ்கனை நடிகை கஜோல் காதலித்து 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.