Tabu: அஜித் உருகி உருகி காதலித்த தபுவா இப்படி.. துணி போட்டு இருக்காங்களா இல்லையானே தெரியலயேப்பா!

மும்பை: நடிகை தபு இந்திய சினிமாவில் இருக்கும் மூத்த நடிகைகளில் ஒருவர். பாலிவுட் சினிமாவில் இவர் அதிக கவனம் செலுத்தி வந்தாலும், இவருக்கு தமிழ்நாட்டில் இப்போதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடருபவர்களில் கணிசமான ரசிகர்கள் தமிழ் ரசிகர்களாக இருப்பார்கள் எனக் கூறலாம். இவர் தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து பலரது கவனத்தை ஈர்த்திருந்தார். அப்படியான, தபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

நடிகை தபு ஆந்திராவைச் சேர்ந்தவர். இவர் இந்தி திரையுலகில் இருந்து தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். அதுவும் குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய இவர், அதன் பின்னர் இந்தியிலேயே கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் என இந்தியாவைக் கடந்தும் தனது நடிப்புத் திறமையால், ஜொலித்தவர்.

Actress Tabu Shares Her Stunning Picture On Instagram Fans Confuesd Tabu Weared Top Or Not
Photo Credit:

இவர் தமிழில் காதல் தேசம் படத்தின் மூலம் அறிமுகம் ஆகியிருந்தாலும், ரசிகர்கள் இந்த படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டார். மேலும் கதையில் அழுத்தத்தை உருவாக்க கூடிய, கதாபாத்திரங்களில் நடித்தார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தாலும், அவரைக் கடந்து தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தார். அஜித்துக்கு அந்த படத்தில் சரியான ஜோடி இவர்தான் என பலராலும் பாராட்டப்பட்டார்.

மொரட்டு சிங்கிள்: இவரது நடிப்புத் திறமையால், இரண்டு தேசிய விருதுகள், ஏழு பிலிம்ஃபேர் விருதுகள் வென்றுள்ளார். இது மட்டும் இல்லாமல், கடந்த 2011ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார். தபுவுக்கு தற்போது 53 வயது ஆகிறது. ஆனாலும் அவர் இதுவரை திருமணம் செய்யாமல் உள்ளார். இதற்கான காரணத்தை அவர் ஏற்கனவே கூறி உள்ளார். அதாவது, " மோசமான உறவை விட தனிமையாக இருப்பது எவ்வளவோ மேல்" என்று தெரிவித்தார். இந்த கருத்து பலரது கவனத்தை ஈர்த்தது. இதுவரைக்கும் மொரட்டு சிங்கிளாக உள்ளார்.

Actress Tabu Shares Her Stunning Picture On Instagram Fans Confuesd Tabu Weared Top Or Not
Photo Credit:

சர்ச்சை புகைப்படம்: நடிகர்கள் நாகர்ஜுனா, சஞ்சய் கபூர், சஜித் நாடியட்வாலா உள்ளிட்டோருடன் இவர் காதலில் இருந்தார் என்று கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் இது தொடர்பாக நடிகை வெளியில் எதுவும் கூறவில்லை. தபு அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில் அவர் கடைசியாக பகிர்ந்த புகைப்படம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது அந்த புகைப்படத்தில் அவர் மேலாடை அணியாமல் இருப்பது போன்று இருக்கிறார். இதனால் அவர் மேலாடை அணிந்துள்ளாரா இல்லையா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் கமெண்ட் செக்‌ஷனில் ஆர்வமாக கேட்டு வருகிறார்கள். அவரது இந்த புகைப்படம் தற்போது பாலிவுட்டில் பேசு பொருளாக மாறியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X