யாருக்கு கொடுத்துவைத்திருக்கோ? அந்த அதிர்ஷ்டசாலியை பார்க்க அவலாக இருக்கேன்.. வாழ்க்கைத் துணை குறித்து தமன்னா!

மும்பை: திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் என பிஸியாக இருக்கும் நடிகை தமன்னா, சமீபத்தில் தனது காதல் மற்றும் திருமணம் குறித்து வெளிப்படையாக பேசினார். நடிகர் விஜய் வர்மாவுடனான காதல் முடிவுக்கு வந்ததாக கூறப்படும் நிலையில், தனது எதிர்கால துணை குறித்து அவர் பேசியது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

'டு யூ வாண்ட் அ பார்ட்னர்' (Do You Want A Partner) என்ற வெப் சீரிஸின் ப்ரோமோசனின் ஒரு பகுதியாக என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், தமன்னா தனது திருமணம் குறித்துப் பகிர்ந்து கொண்டார். விஜய் வர்மாவுடனான காதல் பிரிவு குறித்து நேரடியாகப் பேசாமல், தான் எப்படிப்பட்ட துணையாக இருக்க விரும்புகிறார் என்பதை அவர் விவரித்தார்.

Actress Tamannah Opens About Her Future Life Partner At Do You Want A Partner Web Series Promotion

அதிர்ஷ்டசாலி: நான் சிறந்த வாழ்க்கைத் துணையாக மாற முயற்சிக்கிறேன். முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் நான் அவர்களின் வாழ்க்கைக்கு வந்ததாக ஒருவர் நினைக்க வேண்டும். அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலி எனக்கு வாழ்க்கைத் துணையாக வரவேண்டும். அந்த அதிர்ஷ்டசாலி யார் என்று பார்க்க வேண்டும், அதற்காக நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன். யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ தெரியவில்லை என்று தமன்னா கூறியது ரசிகர்கள் மத்தியிலும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

விஜய் வர்மா: விஜய் வர்மா மற்றும் தமன்னாவின் காதல் உறவு குறித்த செய்திகள் சில மாதங்களுக்கு முன்னர் வரை வெளிவந்தன. 'லஸ்ட் ஸ்டோரீஸ் 2' (Lust Stories 2) வெப் சீரிஸில் இருவரும் இணைந்து நடித்த போது ஏற்பட்ட நட்பு, பின்னர் காதலாக மாறியது. கடந்த 2023 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியான பிறகு, அவர்களது காதல் உறுதிப்படுத்தப்பட்டது. இருவரும் வீக் எண்ட் பார்ட்டிகளிலும் இரவு விருந்துகளிலும் இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி அவர்களது காதலை உறுதிப்படுத்தியது.

Actress Tamannah Opens About Her Future Life Partner At Do You Want A Partner Web Series Promotion

காதல் முறிவு: பல பேட்டிகளிலும் இருவரும் தங்கள் உறவு குறித்து வெளிப்படையாக பேசினர். கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள் பரவின. இருவரும் இதுகுறித்து எந்தப் பதிலும் அளிக்காத நிலையில், தற்போது தமன்னா தனது வாழ்க்கைத் துணை குறித்துப் பேசியிருப்பது பிரிவை உறுதிப்படுத்துவதாக பலர் கருதுகின்றனர். ஆனால் ஏற்கனவே விஜய் வர்மா வேறு ஒரு நடிகையுடன் டேட்டிங்கில் இருக்கிறாரே என்று கேட்டபோது யார் யாருடன் இருந்தால் எனக்கு என்ன என்று பதில் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பேட்டியில் தமன்னா தனது வாழ்க்கைத் துணை குறித்து பேசியுள்ளதால் அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுவிட்டாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X