»   »  வெயிலிலிருந்து தப்ப இந்த தனிஷா எங்க போனார்னு தெரியுமா...?

வெயிலிலிருந்து தப்ப இந்த தனிஷா எங்க போனார்னு தெரியுமா...?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தமிழகம் மட்டுமா வெயிலில் காய்கிறது... மும்பையும் கூடத்தான் அக்னியில் உருகுகிறது. இதிலிருந்து தப்ப மக்கள் தங்களது வசதிக்கேற்ற நிழலைத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

மும்பையில் வெயில் தலைக்கு மேல் ஓடிக் கொண்டிருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் அக்னிக் குண்டம் போல அனல் பாய்கிறது. சூட்டைத் தணிக்கவும் தப்பவும் மக்கள் தாறுமாறாக அலை பாய்ந்து கொண்டுள்ளனர்.

பாலிவுட் பிரபலங்கள், அரசியல்வாதிகள், வர்த்கர்கள் விதம் விதமாக கோடையிலிருந்து தப்பி மாநிலம் விட்டும், நாடு விட்டும் ஓடிக் கொண்டுள்ளனர். தனிஷா சிங்கும் அவர்களில் ஒருவர்.. ஆமா.. யாரு இந்த தனிஷா சிங்...?

இவரும் நடிகைதான்

இவரும் நடிகைதான்

தனிஷாவும் நடிகைதான். பாலிவுட்டில் நடித்து வருகிறார். அட தமிழில் கூட நடித்துள்ளார் பாஸ்... தெலுங்கிலும் தலை உடல் காட்டியுள்ளார்.. எஸ். கவர்ச்சி நடிகைதான் நம்ம தனிஷா.

சாது மிரண்டா.. ஞாபகம் இருக்கா...!

சாது மிரண்டா.. ஞாபகம் இருக்கா...!

சாது மிரண்டா என்று ஒரு படம் வந்ததே.. நினைவிருக்கிறதா... ஆமாங்க, அந்தப் படம்தான்.. அதில்தான் பிரசன்னாவுடன் இணைந்து தனிஷா நடித்திருந்தார். அதுபோல கிட்டத்தட்ட 12 படங்களில் நடித்துள்ளார் தனிஷா.

குத்துப் பாட்டுக்கு

குத்துப் பாட்டுக்கு

நடிப்பை விட கவர்ச்சியும், டான்ஸும் சிறப்பாக வரவே, பேசாமல் குத்தாட்டம் போடலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவை எடுத்து குத்தாட்ட நாயகியாகி விட்டார். தமிழ், தெலுங்கு, இந்தி, ஒரியா மொழிப் படங்களில் குத்தாட்டம் போட்டுள்ளாராம்.

வெளிநாட்டில் வெயிலாட்டம்

வெளிநாட்டில் வெயிலாட்டம்

வெயில் தலைக்கு மேல் கொளுத்தும் மும்பையிலிருந்து தப்பி சமீபத்தில் வெளிநாட்டுக்குப் போயிருந்தாராம் தனிஷா. அங்கு போய் பீச் ரிசார்ட்டில் தங்கி நன்றாக ஜில் ஜில் என ஓய்வில் இருந்தாராம்.

எங்கத்தா போனீங்க...!

எங்கத்தா போனீங்க...!

ஆனால் எங்கு போனேன் என்பதை மட்டும் சொல்லவே மாட்டேன் என்கிறார் தனிஷா. இதுகுறித்து அவர் கூறுகையில், உடம்பெல்லாம் இந்த வெயிலில் டயர்ட் ஆகிப் போய் விடுகிறது. நிச்சயம் உடம்புக்கு ரெஸ்ட்டும், ஜில்னஸும் தேவை. அதான் போய் விட்டேன்.

நல்லா குடிச்சேன்

நல்லா குடிச்சேன்

தினசரி நன்றாக குடித்தேன். ஹலோ.. தண்ணீரைச் சொன்னேன். அதுதான் நமது உடம்பு நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள ஒரே வழி (எட்டு ஊருப் பஞ்சாயத்திலேயும் இதை எல்லாரும் நம்பிட்டாங்கம்மா...)

இளநீர் கொடுங்கப்பா

இளநீர் கொடுங்கப்பா

பிறகு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை இளநீர் குடிப்பேன். அது அவசியமானது. உடம்பில் நீர்ச்சத்து மட்டுமல்லாமல், சத்தையும் தக்க வைக்க இளநீர் மிக மிக அவசியம். உடம்பையும் அது கூலாக்கும் என்றார் தனிஷா.

கடைசி வரை இந்த ராகுல் காந்தி மாதிரியே, எங்கே போனேன் என்பதையே சொல்லவே இல்லையே நீங்க.. போங்கக்கா!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    The summers has finally hit Mumbai, the mercury was seen soaring and it’s time for everyone to make some changes and to beat the heat. The summers have struck a bad chord compelling not only normal individuals, but even Bollywood celebs, Politicians, Businessman to sneak out to exotic beach locations for a cool holiday. Recently Tanisha Singh spend her holiday where she had taken time and was seen chilling at a breathtaking locales. As the weather is very dry in Mumbai, Tanisha understands the necessity to keep oneself hydrated, even though there is a flipside to drinking lots of water, which is sweating profusely.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more