Don't Miss!
- Sports
ஐபிஎல் தொடர் மீது தான் ஆர்வம் இருக்கு.. இது நல்லது அல்ல.. இங்கிலாந்து ஜாம்பவான் வேதனை
- News
ரயிலில் பயணித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. அபாய சங்கிலியை இழுத்து நிறுத்திய பெண்.. காரணம் என்ன?
- Automobiles
டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அதிவேக பயணம்... தறிகெட்டு ஓடிய கார்... விபத்தில் சிக்கிய பிரபல நடிகை !
சென்னை : அதிவேகமாக சென்ற கார் விபத்துக்குள்ளானதில் பிரபல நடிகை படுகாயமடைந்துள்ளார்.

மாடல் அழகியும் நடிகையுமான தனுஸ்ரீ தத்தா, ஆசிக் பனாயா அப்னே என்ற இந்தி படத்தின் மூலம் திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கி உள்ளார். அதைத் தொடர்ந்து வீரபத்ரா என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்தி ,தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிப்படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.

நடிகர் விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற போதும் நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு தமிழில் படவாய்ப்புகள் சரிவர அமையவில்லை. இதனால், மீண்டும் பாலிவுட்டுக்கு சென்றார் அங்கும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், நடிகை தனுஸ்ரீ உஜ்ஜயினியில் உள்ள மகாகால் கோவிலுக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் சென்றுள்ளார். கோவிலுக்கு செல்லும் முன் நெற்றியில் மஞ்சள் பூசி பக்தி பரவசத்துடன் இருக்கும் செல்ஃபிகளை பகிர்ந்து இருந்தார். மேலும், வெள்ளை நிற துப்பட்டாவுடன் மெரூன் நிற உடையில் மிகவும் அழகாக இருந்த அந்த போட்டோவுக்கு லைக்குள் குவிந்து வந்தன.
இதையடுத்து, கோவிலுக்கு செல்லும் வழியில் கார் பிரேக் பிடிக்காமல் தறிகெட்டு ஓடி விபத்துக்குள்ளானதாகவும், காலில் காயம் ஏற்பட்டு 5 தையல் போட்டதாகவும் நடிகை தனுஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இது ஒரு சாகச நாள் என்றும், கடைசியில் மகாகால் தரிசனம் செய்ததாகவும் கூடிறியுள்ளார்.