»   »  ஏன் கடவுளே ஏன்??.. மேகிக்காக வருந்திய திரிஷா

ஏன் கடவுளே ஏன்??.. மேகிக்காக வருந்திய திரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மேகிக்கு என்னதான் தடை விதித்தாலும் அதன் மீதுள்ள "கிரேஸ்" மக்களிடமிருந்து அவ்வளவு சீக்கிரம் போகாது போல.

மேகிக்கு எதிர்ப்பாளர்களை விட ஆதரவாளர்களே அதிகம் என்பதும் நிதர்சனமானது.

காரணம், கஷ்டப்பட்டு செய்யும் சமையலை விட மேகியை சில நிமிடங்களில் செய்து சாப்பிட்டு முடித்து ஏப்பமே விட்டு விடலாம் என்பதுதான்.

தீவிர வெறியை “திரிஷா”:

நடிகை திரிஷா மேகியின் தீவிர வெறியை. மேகி இல்லாமல் அவரது எந்த நாளும் முடியாதாம். அதை தனது டிவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளார் திரிஷா.

சோகத்தில் ஆழ்ந்துள்ள திரிஷா:

சோகத்தில் ஆழ்ந்துள்ள திரிஷா:

மேகிக்குத் தடை விதிக்கப்பட்டதும் அவர் வெளியிட்ட டிவிட்டில், மேகி... சிதறிப் போய் விட்டேன். ஏன் கடவுளே ஏன் என்று கேட்டு சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார் திரிஷா.

எக்கச்சக்க ஆறுதல்கள்:

எக்கச்சக்க ஆறுதல்கள்:

திரிஷா சோகத்துடன் வெளியிட்டுள்ள அவரது போஸ்ட்டுக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து அதில் பதில் கொடுத்துள்ளனர்.

கவலைப்படாதீங்க திரிஷா:

கவலைப்படாதீங்க திரிஷா:

அதில் ஒருவர் நினைத்தேன் திரிஷா. நீங்க சோகமாகவீங்கன்னு எனக்குத் தெரியும். ஒருமுறை அளித்த பேட்டியில் நான் மேகியில்தான் உயிர் வாழ்கிறேன் என்று கூறியிருந்தீிர்கள் என்று கூறியுள்ளார்.

நல்லதுக்கில்ல செல்லம்:

நல்லதுக்கில்ல செல்லம்:

இன்னொருவர் மேகிக்காக கவலைப்படாதீர்கள் திரிஷா. அது நல்ல உணவல்ல என்று அறிவுரை கூறியுள்ளார்.

இடியாப்பம் சாப்பிடுங்க:

இடியாப்பம் சாப்பிடுங்க:

இன்னொருவர் மேகி போச்சு. இடியாப்பம் ரிட்டர்ன்ஸ் என்று கூறி திரிஷாவுக்கு வேற ரூட்டைக் காட்டியுள்ளார்.

கலாய்த்த ரசிகர்:

கலாய்த்த ரசிகர்:

இன்னொரு குசும்பரோ, மேகி குழந்தைகளுக்கானது திரிஷா. உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்று கலாய்த்துள்ளார்.

English summary
Trisha tweeted with sad for Maggi noodles. She loves Maggi a lot. Her fans made her solace for come out this Maggi ban.
Please Wait while comments are loading...