ஊர்மிளா மடோன்கருக்கு கொரோனா.... ரசிகர்கள் பிரார்த்தனை
மும்பை : நடிகையும், அரசியல்வாதியுமான ஊர்மிளா மடோன்கர் தமிழில் இந்தியன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் நடித்த ஒரே தமிழ் படம் இது தான். இருந்தாலும் ஒரே படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்து விட்டார்.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஊர்மிளா, படிப்படியாக வளர்ந்து இந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்தார். இந்தியில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர்.

அரசியல்வாதியான ஊர்மிளா
2019 ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து, அந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, தோல்வி அடைந்தார். பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, 2020 ம் ஆண்டு சிவசேனா கட்சியில் இணைந்தார். ஆங்கிலம், இந்தி, மராத்தி மொழிகள் தெரியும் என்பதால் இவருக்கு கட்சியில் செல்வாக்கு அதிகரித்தது.

கொரோனா உறுதியானது
தீவிர அரசியலில் இருந்து வந்த ஊர்மிளா, தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இன்று காலை கொரோனா உறுதி செய்யப்பட்டதுமே அந்த தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் ஊர்மிளா.

தனிமைப்படுத்திக் கொண்டேன்
அவர் தனது ட்விட்டர் பதிவில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் நலமுடன் இருக்கிறேன். வீட்டில் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் சமீப நாட்களாக தொடர்பில் இருந்த அனைவரும் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

பாதுகாப்பாக இருங்கள்
தீபாவளி பண்டிகை காலத்தில் நீங்களும், உங்களின் அன்பானவர்களும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளும்படி அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஊர்மிளா கேட்டுக் கொண்டுள்ளார். இதை அவர் பகிர்ந்த சிறிது நேரத்திலேயே அவரது ரசிகர்கள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவிக்க துவங்கி விட்டனர்.

ஆர்யானுக்கு எதிராக முழக்கம்
சமீபத்தில் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட போது, அதை ஆதரித்து குரல் கொடுத்தார் ஊர்மிளா. அதே சமயம், இந்த சோதனையான காலத்தில் ஷாருக்கானின் முதிர்ச்சி, கண்ணியம் ஆகியவற்றையும் அவர் பாராட்டி இருந்தார்.

ஷாருக்கிற்கு பாராட்டு
இது போன்ற கடுமையான, சோதனையான காலங்களில் தான் ஒருவரின் உண்மையான கேரக்டர் வெளிப்படும். அவரின் கண்ணியம், முதிர்ச்சி, வலிமை, பாசம் ஆகியவை மிக தெளிவாக அனைவருக்கும் தெரிந்துள்ளது. உங்களுடன் பணியாற்றிய நடிகையாக நான் பெருமை கொள்கிறேன் என ஷாருக்கானை புகழ்ந்து ட்வீட்டும் செய்திருந்தார்.


Click it and Unblock the Notifications











