வேலையில்லாத இடியட்ஸ்.. எனக்கு நேரமில்லை.. அசிங்கமாய் பேசியதாக கூறிய நகுல்.. பதிலடி கொடுத்த வனிதா!

சென்னை: தங்களை பற்றி செட்டில் அசிங்கமாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் நகுல் கூறியதற்கு நடிகை வனிதா பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமார் என்றாலே சர்ச்சை என்றாகி விட்டது. எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பி விடுகிறார்.

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை வனிதா, பின்னர் ஹீரோயினாக ஒரு சில படங்களில் நடித்தார்.

இதய நோயால் அவதிப்படும் 3 வயது ஜெசிக்காவிற்கு உதவுங்கள் ப்ளீஸ்

மூன்று குழந்தைகளுக்கு தாய்

மூன்று குழந்தைகளுக்கு தாய்

ஆனால் சினிமா எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்காத நிலையில் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார். இதுவரை மூன்று திருமணம் செய்துள்ள வனிதா, மூன்று குழந்தைகளுக்கு தாயானார்.

விவாகரத்து - காதல் தோல்வி

விவாகரத்து - காதல் தோல்வி

ஆனால் மூன்று திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. இதனிடையே டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை காதலித்தார். அந்த காதலும் தோல்வியில் முடிந்த நிலையில் நடிகை வனிதா, சிங்கிள் மதராக இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

எந்நேரமும் சண்டை சச்சரவு

எந்நேரமும் சண்டை சச்சரவு

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் சக போட்டியாளர்களிடம் எந்நேரமும் சண்டை சச்சரவு என இருந்த வந்தார். இதனால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.

மீண்டும் பிரபலமான வனிதா

மீண்டும் பிரபலமான வனிதா

இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார் வனிதா. அதன் பிறகு தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிஸியானார் வனிதா. வனிதாவுக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

கை வசம் பல படங்கள்

கை வசம் பல படங்கள்

அனல்காற்று, 2கே அழகானது காதல், அந்தகன், சிவப்பு மனிதர்கள், வாசுவின் கர்ப்பிணிகள், கொடூரன், பிக்கப் ட்ராப் என பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் வனிதா.

ரம்யா கிருஷ்ணனுடன் மோதல்

ரம்யா கிருஷ்ணனுடன் மோதல்

இதில் நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்த ரம்யா கிருஷ்ணனுடன் வனிதாவுக்கு மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த வனிதா, இதுதொடர்பாக ஒரு பக்கத்திற்கு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

பொறாமை பிடித்த பெண்கள்

பொறாமை பிடித்த பெண்கள்

அதாவது, பணியிடங்களில் பெண்களை மோசமாக நடத்துவது ஆண்கள் மட்டுமல்ல. பொறாமை பிடித்த பெண்களும்தான். எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளையும் ஒழிக்க முயல்கிறார்கள். பல ஆண்டுகள் அனுபவம்மிக்க சீனியர் ஒருவர் தன்னைவிட வயது குறைந்தவர்களிடம் இப்படி நேர்மையின்றி நடந்துகொள்வது எனக்கு வருத்தம் அளிக்கிறது என தெரிவித்திருந்தார்.

சீனியர் பெண் ஒருவரால்

சீனியர் பெண் ஒருவரால்

வேலை செய்யும் இடத்தில் சீனியர் பெண் ஒருவரால் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் துன்புறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து வனிதா வெளியேற காரணம் ரம்யா கிருஷ்ணனா என்ற கேள்விகள் எழுந்தன.

ஒரு பிரச்சனையே இல்லை

ஒரு பிரச்சனையே இல்லை

அதற்கு பதில் அளித்த ரம்யா கிருஷ்ணன், தன்னை பொறுத்தவரை இது ஒரு பிரச்சனையே இல்லை என்று கூறினார். இந்நிலையில் இது தொடர்பான எபிசோடில் வனிதாவின் பர்ஃபாமன்ஸை ரம்யா கிருஷ்ணன் மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிட்டார்.

ஆர்டர் போட்ட வனிதா

ஆர்டர் போட்ட வனிதா

மேலும் வனிதாவின் பர்ஃபாமன்ஸுக்கு குறைந்த மதிப்பெண்களை வழங்கினார். இதனால் கோபமடைந்த வனிதா மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள் என நடுவரான ரம்யா கிருஷ்ணனுக்கு ஆர்டர் போட்டார். மேலும் நிகழ்ச்சியில் இருந்து வாக்கவுட் செய்தார்.

வனிதா செட்டில் அசிங்கமாக பேசினார்

வனிதா செட்டில் அசிங்கமாக பேசினார்

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான நகுல் அண்மையில் மனம் திறந்து பேசினார். அப்போது அம்மன் வேஷம் போட்டுக்கொண்டு நடிகை வனிதா தங்களை செட்டில் அசிங்கமாக பேசியதாக கூறினார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதரவு

லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதரவு

மேலும் வனிதா பேசியதற்கு தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார். அதோடு சேற்றில் விழ விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார் நகுல். இந்நிலையில் இதற்கு லட்சுமி ராமகிருஷ்ணனும் ஆதரவாக பேசிய நிலையில், தற்போது வனிதா பதிலடி கொடுத்துள்ளார்.

வேலையில்லாத இடியட்களின் உளறல்கள்

வேலையில்லாத இடியட்களின் உளறல்கள்

வனிதா பதிவிட்டிருப்பதாவது, நான் என் வாழ்க்கையை பிஸியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இந்த வேலையில்லாத இடியட்களின் உளறல்களை கண்டுகொள்ள எனக்கு நேரம் இல்லை. செட்டில் என்ன நடந்தது, அதன் பின் ஜட்ஜுகளை வைத்து மீண்டும் ஷூட் செய்து எடிட் செய்து வெளியிட்டதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

தொடர வேண்டாம் என முடிவு

தொடர வேண்டாம் என முடிவு

எனக்கு அளிக்கப்பட்ட மார்க்கை நான் ஏற்றுக்கொள்ளவில்லை, அதனால் ஷோவில் தொடர வேண்டாம் என நான் முடிவு செய்தேன்." என குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பிரச்சனை இருந்தது

ஏற்கனவே பிரச்சனை இருந்தது

மேலும் மற்றொரு பதிவில் எனக்கு ஒருவருடன் பிரச்சனை வருகிறது என்றால், எங்களுக்கு நடுவில் ஏற்கனவே பிரச்சனை இருந்தது என்று அர்த்தம். அது எங்களுக்கு நடுவில் தான்.

Recommended Video

Nakkhul சொல்வது உண்மையா? Reality Showல Body Shaming இருக்கு | BB Jodigal
வாயை மூடிக்கொண்டிருக்கும் போது

வாயை மூடிக்கொண்டிருக்கும் போது

நாங்கள் இருவரும் வாயை மூடிக்கொண்டிருக்கும் போது, மற்றவர்களும் அதை பற்றி பேசாமல், விமர்சிக்காமல் இருக்க வேண்டும்" என கூறியுள்ளார். வனிதாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவரை விளாசியுள்ளனர்.

சர்ச்சை மூலம் கவனம் ஈர்ப்பவர்

சர்ச்சை மூலம் கவனம் ஈர்ப்பவர்

மேலும் நல்ல ஸ்ட்ரேட்டர்ஜி என்றும் சர்ச்சையை கிளப்பி கவனத்தை ஈர்ப்பவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதற்கும் பதிலளித்த வனிதா, உங்களின் காம்ப்ளிமெண்டுக்கு நன்றி.. நியூஸ் மேக்கராகவும் ஸ்ட்ரேட்டர்ஜிஸ்ட்டாகவும் இருப்பது அவ்வளவு ஈஸி இல்லை என்று கூறியுள்ளார்.

ஆபாசமாக பேசிய வனிதா

ஆபாசமாக பேசிய வனிதா

ஏற்கனவே வனிதாவின் மூன்றாவது திருமணத்தில் பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாக பேசியதற்காக நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணனை ஆபாசமாக பேசினார் வனிதா. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X