Varalakshmi : குடும்பத்துடன் அட்டகாசமாக தீபாவளி கொண்டாடிய வரலட்சுமி சரத்குமார்!

சென்னை: நடிகர் சரத்குமார் மற்றும் சாயா தேவியின் மூத்த மகளான வரலட்சுமி தமிழ் மற்றும் தெலுங்கில் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது நிலையில் தனது கணவருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி உள்ளனர். அந்த போட்டோவை வரலட்சுமி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் 2012ம் ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் ஹீரோயினாக நடித்து சினிமாவில் அறிமுகமானர். முதல் படத்திலேயே காதலி, மனைவி என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றபோதிலும், வரலட்சுமிக்கு பட வாய்ப்புகள் பெரிதாக வரவில்லை. தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், மற்ற மொழி படங்களில் அவர் நடித்து வந்தார். கதாநாயகி கதாபாத்திரத்தைவிட வரலட்சுமிக்கு வில்லி கதாபாத்திரம் பக்காவாகப் பொருந்தியதால், அனைத்து மொழிப் படங்களிலும் நடித்து வந்தார்.

Varalakshmi diwali instagram
Photo Credit:

வரலட்சுமி சரத்குமார்: நடிகை வரலட்சுமிக்கு கடந்த ஆண்டு, தனது 14 வருட நண்பரும், தொழிலதிபருமான நிக்கோலய் சச்தேவ் என்பவருடன் தாய்லாந்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில், பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இதையடுத்து, சென்னையில் லீலா பேலஸில் மிகவும் பிரமாண்டமாக திருமண வரவேற்பு நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதல் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட்டம்: அன்பான கணவர்: வரலட்சுமியின் கணவர் நிக்கோலை பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக முரட்டுத்தனமான நபராக தெரிந்தாலும், குழந்தை குணம் கொண்டவர். திருமணத்திற்கு பிறகு தன் பெயரை மாற்ற விரும்புவதாக கூறினார் வரலட்சுமி. அதாவது, வரலட்சுமி சரத்குமார் சச்தேவாக மாற்ற விரும்பினார். ஆனால், அவர் எப்பொழுதுமே வரலட்சுமி சரத்குமார் தான். நான் என் பெயரை மாற்றிக்கொள்கிறேன். இனி என் பெயர் நிக்கோலய் வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என்று சொல்லி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தற்போது வரலட்சுமி தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கணவர் நிக்கோலை, சரத்குமார், ராதிகா சரத்குமார், சாயா தேவி என ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து தீபாவளி சிறப்பாக கொண்டாடி உள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X