சைக்கிள் ஓட்டி கிருஸ்துமஸ்சை கொண்டாடிய நடிகை.. புதிய புகைப்படம்

Recommended Video

Celebrity Christmas Celebration 2019 | Selvaraghavan | Iswarya Dhanush

சென்னை : முனி, காஞ்சனா3 படப்புகழ் வேதிகா, கிருஸ்துமஸ்சை சைக்கிள் ஓட்டி கொண்டாடிய புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார்

தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ,வேதிகா தமிழில் கடைசியாக லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படத்தில் நடித்து இருந்தார். தெலுங்கில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான ரூலர் படத்திலும் பாலகிருஷ்ணாவுடன் நடித்து இருந்தார். மேலும் ஹிந்தியில் தி பாடி படத்தில் நடித்து தனது முதல் ஹிந்தி படத்தையும் நிறைவு செய்துள்ளார்.

Actress Vedhika christmas celebration

வேதிகா கிருஸ்துமஸ்சை வேறு விதமாக கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் ஒரு மூன்று சக்கர மிதிவண்டியை மாற்றி அமைத்து அதற்கு கிருஸ்துமஸ் அலங்காரமான ஸ்டார், பலூன், வண்ண விளக்குகள் அமைத்து அதை அலங்கரித்து. அந்த வண்டியில் ஒரு கிருஸ்துமஸ் தாத்தா பொம்மையை உட்கார வைத்து அந்த வண்டியை ஓட்டி கிருஸ்துமஸ் கொண்டாடி இருக்கிறார் .

வேதிகா இந்த நிகழ்வை புகைப்படமாக எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு ஏற்பட்டு உள்ளது. வேதிகாவை அழகு பொம்மை என்றும், வேதிகா இந்த போட்டோவில் நீங்க மிக அழகாக இருக்குறீர்கள் என்றும் அவரது ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர் .

வேதிகா தமிழில் ஆக்சன் கிங் அர்ஜீனுடன் 'மத்ராசி' படத்தில் அறிமுகமானார். அதற்கு பிறகு அவர் முனி படத்தில் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து இருந்தார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது, அதை தொடர்ந்து தமிழ் , மலையாளம் ஹிந்தி ,தெலுங்கு மற்றும் கன்னட என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து வருகிறார் .மற்ற மொழிகளை விட வேதிகா தமிழில் தான் அதிக படங்களில் நடித்து இருக்கிறார் .

மராத்திய மொழியை தாய் மொழியாக கொண்ட வேதிகா தற்போது தான் முதல் முறையாக 'தி பாடி ' எனும் ஹிந்தி படம் ஒன்றில் நடித்து உள்ளார், இந்த படம் கடந்த டிசம்பர் 13 வெளியாகி நல்ல வெற்றியை பதிவு செய்து உள்ளது .இவர் தமிழில் முனியின் வெற்றிக்கு பிறகு காளை ,சக்கரக்கட்டி,மலை மலை ,பரதேசி ,காவிய தலைவன் ,முனி 4 ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார் .

இதில் பரதேசி படத்தில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றார் ,இப்படி ஒரு கதாபாத்திரத்தில் வேதிகா இனிமேல் நடிப்பது மிக கடினம் என்று சொல்லும் அளவுக்கு அவரை நடிக்க வைத்திருப்பார் இயக்குனர் பாலா. அதற்கு பிறகு காவியத்தலைவன் படத்திலும் சிறந்த நடிப்பை கொடுத்திருப்பார் வேதிகா .

வேதிகா தற்போது பப்பி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான நடிகர் வருனுக்கு ஜோடியாக 'வினோதன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 'பிரபு தேவா' தயாரிக்கவுள்ளார் .இந்த படத்திற்கு பிறகு ஜங்கிள் எனும் தமிழ் படத்திலும் நடிக்க உள்ளார் வேதிகா மற்றும் கன்னட படமான ஹோம் மினிஸ்டர் படத்திலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X