»   »  இந்திரா காந்தி... சுப்பு லட்சுமி... வித்யா பாலனுக்கு குவியும் “பயோபிக்” வாய்ப்புகள்!

இந்திரா காந்தி... சுப்பு லட்சுமி... வித்யா பாலனுக்கு குவியும் “பயோபிக்” வாய்ப்புகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட்டில் நடிகையான வித்யா பாலனுக்கு பிரபலங்களின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தயாராகும் படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகின்றனவாம்.

இது குறித்து அவர் கூறுகையில், "நான் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்ததில் இருந்து வாழ்க்கை கதையை மையமாக வைத்து தயாராகும் படங்களுக்கு அழைப்பு வருகின்றன.

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையை படமாக எடுக்கின்றனர். அந்த படத்தில் இந்திரா வேடத்தில் நடிக்க அழைத்தனர்.

இன்னும் பலர்:

இன்னும் பலர்:

அதுபோல் கர்நாடக சங்கீத பாடகி எம்.எஸ்.சுப்பு லட்சுமி, பெனாசிர் பூட்டோ, நடிகை சுசித்ரா சென் ஆகியோர் வேடங்களிலும் நடிக்க அழைப்புகள் வருகின்றன.

கொஞ்சம் தயக்கம்:

கொஞ்சம் தயக்கம்:

கதைகளையும் என்னிடம் சொல்லி விட்டார்கள். ஆனால் எனக்கு தயக்கமாக இருக்கிறது. வாழ்ந்து மறைந்தவர்களின் வேடங்களில் நடிக்கும் ஆர்வம் குறைந்து விட்டது.

எல்லாமே நல்லதுதான்:

எல்லாமே நல்லதுதான்:

சினிமாவில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. முன்பெல்லாம் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படங்கள்தான் ஓடும். ஆனால் இப்போது சிறுமுதலீட்டு படங்களும் ஓடுகின்றன.

கதைகளுக்கே முக்கியத்துவம்:

கதைகளுக்கே முக்கியத்துவம்:

ரசிகர்கள் கதைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கிறார்கள். நல்ல கதையம்சம் உள்ள படங்களை தியேட்டருக்கு போய் பார்க்கிறார்கள். இனிமேல் நல்ல கதைகளுடன் வரும் படங்கள்தான் ஓடும். கோடிக்கணக்கில் செலவு செய்து கதை இல்லாவிட்டால் அந்த படங்கள் ஓடாது" என்று தெரிவித்துள்ளார்.

English summary
Vidya Balan may have featured in biopic film The Dirty Picture, but the National Aaward-winning actress says she wants to stay away from the genre at the moment.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos