Wamiqa Gabbi: நீச்சல் குளத்துக்குள் அப்படி ஒரு குளியல் போட்ட நடிகை வாமிகா கபி.. பார்த்தா பஞ்சர் ஆகிடுவிங்க!

சென்னை: நடிகை வாமிகா கபி, இந்திய திரையுலகில் மிகவும் கவனிக்கப்படும் நடிகையாக உள்ளார். இவர் தென்னிந்திய மொழிகள் தொடங்கி வட இந்திய படங்களிலும் நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் இவர் தற்போதைக்கு அதிகம் பாலிவுட் படங்களில் தான் அதிக கவனம் செலுத்துகிறார். இந்நிலையில் நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் நீச்சல் குளத்தில் டால்பின் போல சுழன்று சுழன்று குளித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

நடிகை வாமிகா கபி தனது சிறு வயதில் இருந்தே நடித்து வருகிறார். இவர் தனது 8 வயதில் பஞ்சாபி டிவி சீரியலான Saude Dillan De-யில் நடித்திருந்தார். இந்த சீரியல்தான் இவருக்கு முதல் வாய்ப்பு என்பதால் இந்த சீரியலில் அவர் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டார் எனலாம். அதன் பின்னர் 13 வயதில் இந்தி படமான ஜப் வெ மெட் (2007)யில் கரீனா கபூரின் சகோதரியாக அறிமுகமானார். இதற்கு அடுத்து சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் நடிகையாகவே பஞ்சாபி படத்தில் அறிமுகமானார். அறிமுகமான நான்கு ஆண்டுகளில் பஞ்சாபி பிலிம் ஃபேர் விருது வென்றார்.

பல மொழிகள் பேசும் திறன்: மலையாளம், தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, இந்தி, ஆங்கிலம் என 6 மொழிகளில் பேசும் திறன் உடையவர். என்பதால் தமிழில் இயக்குநர் கீதாஞ்சலி செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான மாலை நேரத்து மயக்கம் படத்தில் நடித்து அசத்தினார். இப்படம் வெளியான கால கட்டத்தில் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும், அதன் பின்னர் ரசிகர்கள் படத்தைப் பாராட்டினார்கள். இந்த படத்தின் கதையை இயக்குநர் செல்வராகவன் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லீ தயாரித்த படத்தில்: தொடக்க காலத்தில் நடிகைக்கு சினிமாவை விட்டு போய்விடலாம் என்ற எண்ணம் வந்துள்ளது. ஆனால் நடிகைக்கு சில சினிமா நண்பர்கள் கொடுத்த நம்பிக்கை அவரை இந்தியா முழுவதும் ஒரு ரவுண்ட் வரச் செய்துள்ளது. அண்மையில் அட்லீ தயாரித்த பேபி ஜான் படத்திலும் நடித்திருந்தார். இப்படி இருக்கும்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.

Actress Wamiqa Gabbi Shares Her Swimming Pool Visuals At Instagram Goes Trending
Photo Credit:

நீச்சல் குள வீடியோ: அதாவது அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களில் படப்பிடிப்புத் தளத்தில் அவர் ரிகர்சல் செய்வது, உடன் நடிக்கும் நடிகருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி, அவர் தனது அறையில் ஆவி பிடித்துக் கொண்டு இருந்தது, தனது மொபைலில் ஒரு பெண் சிலையை எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இது மட்டும் இல்லாமல், அவர் தான் நீச்சல் குளத்தில் சுழன்று சுழன்று நீச்சல் அடிக்கும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவுக்கு படப்பிடிப்பின் லக்னோ ஸ்கெட்யூல் நிறைவடைந்தது என்று கேப்ஷன் இட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.குறிப்பாக அவரது நீச்சல் குள வீடியோ வரவேற்பை பெற்று வருகிறது. இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட 5.7 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். இவர் மீண்டும் தமிழிலும் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X