»   »  நடிகைகளின் பாத்ரூம் பீதி

நடிகைகளின் பாத்ரூம் பீதி

Subscribe to Oneindia Tamil

த்ரிஷாவின் பாத்ரூம் குளியல் விவகாரத்திற்குப் பிறகு நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கே நடிகைகள்அச்சப்படுகிறார்களாம்.

வெளிமாநிலங்களில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வரும் நடிகைகள் விமான நிலையத்தில் இருந்து இறங்கியவுடன் நேரேபோவது நட்சத்திர ஹோட்டல்களுக்குத்தான்.

ஒரு படத்தில் நடிப்பதற்கு குறைந்தது ரூ.5 லட்சம் சம்பளம் என்றால், இவர்கள் நட்சத்திர ஹோட்டல்களில் தங்கும் செலவு,மும்பைக்குப் பேசும் எஸ்.டி.டி. பில், சூட்டிங் இல்லாத சமயங்களில் மும்பை போய் வர விமான டிக்கெட் செலவு என ரூ.2 லட்சம்முதல் ரூ.3 லட்சம் வரை தயாரிப்பாளர்களின் காசு கரைந்து விடும்.

அவுட்டோர் சூட்டிங் போகும் போது, அங்கு நட்சத்திர ஹோட்டல்கள் இருக்கிறதா என்பதுதான் நடிகைகளிடமிருந்து வரும் முதல்கேள்வியாக இருக்கும்.

ஆனால் நிலைமை இப்போது தலைகீழ். நட்சத்திர ஹோட்டல்கள் என்றாலே பல நடிகைகள் அலறுகின்றனர்.

காரணம் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் த்ரிஷா குளிப்பது போன்ற வீடியோ காட்சிகள் இன்டர்நெட்டில் வெளியாகி பெரும்பிரளயத்தை கிளப்பியதுதான்.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக ஹோட்டல்களில் தங்கியே வாழ்க்கையைக் கழிக்கும் பல நடிகைகள் மத்தியில் இப்போதுபெரும் பீதி காணப்படுகிறது.

தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையின் பாத்ரூம்களில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகத்துடன்நடிகைகள் தங்கி வருகிறார்களாம்.

சமீபத்தில் சோனியா அகர்வால் தனது வழக்கமான ஹோட்டலிலிருந்து வேறு ஹோட்டலுக்கு ஜாகையை மாற்றியுள்ளாராம்.

கேமரா எதுவும் அவரது பாத்ரூமில் வைக்கப்படவில்லையென்றாலும் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேறுஹோட்டலுக்குப் போயுள்ளாராம்.

அந்த ஹோட்டலில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையின் பாத்ரூமைத்தான் அவர் முதலில் துருவித் துருவி ஆராய்ந்தாரம்.சந்தேகப்படும்படியான எதுவும் பாத்ரூமில் இல்லையென்று தெரிந்த பின்னர்தான் அங்கு தங்க சம்மதித்தாராம்.

இதேபோல, சிந்து துலானியும் சமீபத்தில் தனது ஹோட்டலை மாற்றியுள்ளார். இதுவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைதானாம்.மேலும் ஒரே ஹோட்டலில் நீண்ட நாள் தங்காமல் அடிக்கடி ஹோட்டலை மாற்றவும் அவர் உத்தேசித்துள்ளாராம்.

இதே முடிவில்தான் சதா, நமீதா உள்ளிட்ட வெளி மாநில நடிகைகளும் இருக்கிறார்களாம்.

கையில் ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் வைத்திருக்கும் நடிகைகளில் சிலர் ஹோட்டல் ஜாகையை விட்டு, வாடகை வீட்டில்குடியேறும் முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.

இந்த வாடகைப் பணமும் தயாரிப்பாளர்கள் தலையில்தான் விடியும் என்றாலும், தயாரிப்பாளர்கள் கொஞ்சம் மகிழ்ச்சியாகவேஇருக்கிறார்கள்.

காரணம் எவ்வளவு பெரிய வீடாகப் பிடித்தாலும் மாத வாடகை ரூ.25,000த்தை தாண்டாது என்பதுதான்.

இந்த பாத்ரூம் பயம் ஹோட்டல்களில் தங்கும் நடிகைகள் மட்டுமல்லாது, சொந்த வீட்டில் குடியிருக்கும் சில நடிகைகளையும்அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர்களது பயம், அவுட்டோர் சூட்டிங்கின்போது ஹோட்டல்களில் தங்க வேண்டுமே!

சமீபத்தில் வெளியூருக்கு சென்றிருந்த தேவயானி தனக்கு ஒதுக்கப்பட்ட அறையின் பாத்ரூமை விலாவரியாக ஆராய்ந்த பின்னரேஅங்கு தங்கினாராம்.

இதற்கிடையே "த்ரிஷா டெர்ரருக்குப்" பிறகு நடிகைகள் மத்தியில் பாத்ரூம் குறித்த பயம் இருப்பது நட்சத்திரஹோட்டல்காரர்களுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil