»   »  நடிகைகளுக்கு சில கட்டாயங்கள் உள்ளன! - ஸ்ரேயா

நடிகைகளுக்கு சில கட்டாயங்கள் உள்ளன! - ஸ்ரேயா

Posted By:
Subscribe to Oneindia Tamil
நடிகைகளுக்கென்று சில கட்டாயங்கள், கஷ்டங்கள் உள்ளன. அதையெல்லாம் மீறி தன் முழு திறமையை காட்டி ஜெயிக்க வேண்டியுள்ளது, என்றார் ஸ்ரேயா.

நடிகை ஸ்ரேயாவின் கடைசி தமிழ்ப் படம் ரவுத்திரம். அதன் பிறகு ராஜபாட்டையில் ஒரு குத்தாட்டத்துக்கு ஆட்டம் போட்டார்.

ஆனால் தான் மிகவும் பிஸியாக இருப்பதாகவே கூறி வருகிறார். ஆங்கிலம், இந்திப் படங்களில் நடிப்பதாகவும், தமிழில் கிராமத்துப் பெண் வேடம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறிவருகிறார்.

லைப் ஈஸ் பியூட்டிபுல் என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கும் அவர், தனது அடுத்த படம் குறித்து கூறுகையில், "நல்ல வாய்ப்புகள் மீண்டும் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இப்போது தமிழில் படங்கள் இல்லை என்பது உண்மைதான். அதேநேரம் நல்ல வாய்ப்புகள் வராததால், பல படங்களை நான் வேண்டாம் என கூறிவிட்டது பலருக்கு தெரியாது.

சிவாஜிக்குப் பிறகு, ஜெயிக்குமோ தோற்குமா என்றெல்லாம் யோசிக்காமல் நிறைய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் நடித்த சில படங்கள் தோற்றதற்கு காரணம் இதுதான்.

கதாநாயகிகளுக்கு சில கட்டாயங்கள் நெருக்கடிகள் உள்ளன. பல நிர்ப்பந்தங்களுக்கிடையில், கவர்ச்சியாக நடிக்க வேண்டும். ஆனால் ஆபாசமாக தெரியக்கூடாது அழகு காட்டவேண்டும். நினைத்த மாதிரி நடிக்க முடியாது. இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கூட நான் நடித்த படங்களில் நான் முழு திறமை காட்டியுள்ளேன்.

சினிமாவில் அதிர்ஷ்டம் முக்கியம். தலை எழுத்தை மாற்ற முடியாது. ஒரு படம் ஹிட்டானால் வாழ்க்கையே தலைகீழாக மாறி விடும்.அப்படியொரு படத்துக்காகத்தான் பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு அப்படி வந்த ஒரு படம் சிவாஜி," என்றார்.

English summary
Actress Shriya told that every actress is facing many critical situations and compulsions while acting in a movie.
Please Wait while comments are loading...