»   »  ஹோட்டல் ரூமா? வேண்டவே வேண்டாம்… அலரும் நடிகைகள்…

ஹோட்டல் ரூமா? வேண்டவே வேண்டாம்… அலரும் நடிகைகள்…

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவில் குடும்ப குத்துவிளக்குகளாக நடிக்கும் லட்சுமி மேனன், ஸ்ரீதிவ்யா தொடங்கி கவர்ச்சி நாயகிகள் தமன்னா, ஹன்சிகா என பாத்ரூம் குளியல், நிர்வாண வீடியோ காட்சிகள் இன்றைக்கு இணையத்தில் உலாவருகின்றன.

சினிமாவே வேண்டாம் ஆளை விடுங்கப்பா என்று லட்சுமி மேனன் நொந்து போகும் அளவிற்கு வீடியோக்களும் படங்களும் வெளியாகி மனதை நோகடிக்கின்றன.

மன உளைச்சலில்

மன உளைச்சலில்

சமீபகாலமாக நடிகைகளுக்குப் இது பெரிய தலைவலியாக இருக்கிறது. இணையத்தில் அந்தரங்க வீடியோக்கள் லீக் ஆவதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

ஹோட்டல் ரூம்

ஹோட்டல் ரூம்

வீடியோக்கள், போட்டோக்கள் பெரும்பாலும் ஹோட்டல் அறைகளில் இருந்து எடுக்கப்பட்டவை என்பதால், பாதிக்கப்பட்ட நாயகிகள் மட்டுமல்லாது அனைத்து சினிமா நாயகிகளும் ஹோட்டலில் தங்குவதற்கு அஞ்சுகிறார்களாம். எனவே தயாரிப்பாளர்களிடம் தங்குவதற்கு வீடு ஏற்பாடு செய்து கொடுக்கச் சொல்லிக் கேட்கிறார்களாம்.

போலியா? உண்மையா?

போலியா? உண்மையா?

ஹீரோயின்களின் அந்தரங்க வீடியோக்கள், புகைப்படங்கள் மார்ஃபிங்கா, இல்லை உண்மையான வீடியோக்களா என யோசிப்பதற்கு முன்பு, அவர்கள் ஹீரோயின்கள் என்பதால் அது அனைவரின் பார்வைக்கும் கிடைத்துவிடுகிறது.

அக்கா, தங்கை இல்லையா?

அக்கா, தங்கை இல்லையா?

இப்படி ஒரு வீடியோவை சித்தரிக்கும் போது, அதனை செய்பவர் முதலில் அவரது அக்கா, தங்கை, மனைவியை நினைத்து பாருங்கள் என்கிறார் நடிகை சஞ்சனா சிங். இவர் ரேணிகுண்டா', ‘மீகாமன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

டோட்டல் டேமேஜ்

டோட்டல் டேமேஜ்

நடிகையாக இருப்பது மிகவும் கடினம். எவ்வளவோ கஷ்டப்பட்டு நாங்கள் எங்கள் பெயரை தக்க வைத்துக்கொள்கிறோம். அப்படி இருக்கையில் ஓரிரு நிமிட வீடியோக்களில் எங்களது மொத்த பெயரையும் கெடுத்து விடுகிறார்கள். கொஞ்சம் உங்கள் குடும்ப பெண்களை நினைத்து பாருங்கள் என்று கூறியுள்ளார். இந்த நடிகை கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அழகை ரசிக்கும் நடிகைகள்?

அழகை ரசிக்கும் நடிகைகள்?

தனிமையில் ஒவ்வொரு மனிதனும் தங்களது உடல் அழகை ரசிப்பது சாதாரண விஷயம்தான். முன்பு கண்ணாடியில் பார்த்தோம், இப்போது டெக்னாலஜி வளர்ச்சியால் செல்ஃபிக்கள், வீடியோக்கள் என எடுத்து பார்ப்பது வழக்கமாகிவிட்டது.

பரவும் வீடியோக்கள்

பரவும் வீடியோக்கள்

நம் மொபைல்தானே என அதை அழிக்காமல் அப்படியே விட்டுவிட்டால், நம் மொபைலுக்குள் இருக்கும் அப்ளிகேஷன்களே அவ்வீடியோக்களை தற்காலிக சர்வருடன் இணைத்து விடும். அல்லது மொபைல் ரிப்பேர், யூஎஸ்பி கனெக்ஷன் என பல வழிகள் மூலம் பரவிவிடுகின்றன.

நெருக்கமானவர்களுடன்

நெருக்கமானவர்களுடன்

நடிகைகளின் வீட்டில் உள்ள வேலையாட்கள் மூலமாகவோ அல்லது நண்பர்கள் மூலமாகவோ படம் பிடிக்கப்பட வாய்ப்புகளும் உள்ளன. மேலும் பாய் ஃப்ரண்ட், கேர்ள் ஃப்ரண்ட் , காதல் என்ற பெயரிலும் இப்போதெல்லாம் ஆண் , பெண்கள் தங்களது அந்தரங்கத்தை பகிர்ந்து கொள்ள துவங்கிவிட்ட நிலையில் அப்படியும் போகலாம். இது போன்ற விஷயங்களில் சமீபகாலமாக டீன் ஏஜ் வயதினரே அதிகம் பாதிக்கப்படுவதாக ஒரு சர்வே சொல்கிறது.

செல்ஃபி அவசியமா?

செல்ஃபி அவசியமா?

நாம் எடுக்கும் சாதாரண செல்ஃபி மற்றும் செல்ஃபி வீடியோக்கள்தான் காரணம். தவிர நம் முகத்தை வேறு ஒரு பெண்ணின் உடலில் அப்பட்டமாக நாம் போன்றே மார்பிங் செய்ய முடியும். எனவேதான் பெண்கள் தங்களது செல்ஃபிக்கள், போட்டோக்களை முடிந்தவரை சமூக வலை தளங்களில் தவிர்த்து விடுங்கள் என பலரும் வலியுறுத்துகின்றனர்.

English summary
Tamil cinema actresses are avoiding staying in hotel rooms after Hansika bathroom issue

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil