»   »  ரம்பாவுக்கு வந்த அதே பிரச்சனை நஸ்ரியா, ரேஷ்மி, கனிகாவுக்கும்

ரம்பாவுக்கு வந்த அதே பிரச்சனை நஸ்ரியா, ரேஷ்மி, கனிகாவுக்கும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகைகள் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தாலும் அவர்கள் கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக அவ்வப்போது வதந்தி பரவுகிறது.

நடிகை ரம்பா தனது கணவர் இந்திரன் பத்மநாதன், 2 மகள்களுடன் கனடாவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் கணவரை பிரிந்து வாழ்வதாகவும், அவருடன் சேர்த்து வைக்கக் கோரி நீதிமன்றத்தை அணுகியதாகவும் செய்திகள் வெளியாகின.

ரம்பா போன்று பல நடிகைகளின் திருமண வாழ்க்கை குறித்து வதந்திகள் பரவியுள்ளது.

ரம்பா

ரம்பா

எனக்கும் என் கணவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என நடிகை ரம்பா தெரிவித்துள்ளார். ரம்பாவின் கணவர் அவருக்காக புது பங்களா கட்டியுள்ளாராம்.

ரேஷ்மி மேனன்

ரேஷ்மி மேனன்

நடிகர் பாபி சிம்ஹாவும், நடிகை ரேஷ்மி மேனனும் விவாகரத்து பெறப் போவதாக செய்திகள் வெளியாகின. இதை பார்த்த பாபி தானும், தனது மனைவியும் பிரியவில்லை என்று விளக்கம் அளித்தார்.

கனிகா

கனிகா

நடிகை கனிகா தனது கணவர் ஷ்யாமுடன் சென்னையில் வசித்து வரும் நிலையில் அவர் விவாகரத்து பெறுவதாக கூறப்பட்டது. இது குறித்து அறிந்த கனிகா, நான் என் கணவர் மற்றும் மகனுடன் சந்தோஷமாக உள்ளேன் என்றார்.

நஸ்ரியா

நஸ்ரியா

நஸ்ரியாவும் மலையாள நடிகர் பஹத் பாசிலும் திருமணமான ஓராண்டுக்குள் பிரிந்துவிட்டதாக வதந்தி பரவியது. நஸ்ரியா படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு கணவரை கவனித்துக் கொண்டிருக்கிறார்.

ரீமா கல்லிங்கல்

ரீமா கல்லிங்கல்

பரத்தின் யுவன் யுவதி படத்தில் நடித்த மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் தனது இயக்குனர் கணவர் ஆஷிக் அபுவை விவாகரத்து செய்துவிட்டதாக கூறப்பட்டது. இந்த தகவலை ரீமா மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோகினி

மோகினி

ஈரமான ரோஜாவே படம் மூலம் கோலிவுட் வந்த நடிகை மோகினி தனது கணவர் பரத்தை விவாகரத்து செய்ததாக கூறப்பட்டது. இது குறித்து அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்து, நான் விவாகரத்து எல்லாம் செய்யவில்லை கணவருடன் சேர்ந்து வாழ்கிறேன் என விளக்கம் அளித்தார்.

English summary
Actresses Rambha, Kanika, Nazriya, Reshmi Menon, Mohini, Reema Kallinagal are victims of divorce rumours.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil