Don't Miss!
- News
சபாஷ்.. மதவாத சக்திகளை வீழ்த்த கமல்ஹாசன் ஆதரவு.. காங்கிரஸ் பாராட்டு மழை
- Sports
கோலி தந்த ஐடியா தான் அது.. நியூசி,யின் மிடில் ஆர்டரை சுருட்டியது எப்படி?.. ஷர்துல் சுவாரஸ்ய பதில்!
- Lifestyle
கும்பத்தில் சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
- Automobiles
ஆட்டோ மாதிரி ஓடும், ஸ்டாண்ட் போடவே தேவை இல்ல... செல்ஃப்-பேலன்ஸிங் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - பெய்கோ எக்ஸ்4!!
- Technology
4 மிட்-ரேன்ஜ் போன்கள் மீது "முரட்டு" ஆபர்.. சம்பளம் போடுற நேரமா பார்த்து டெம்ப்ட் ஏத்துறாங்களே!
- Finance
ஜன.26 அல்வா நிகழ்ச்சி.. பட்ஜெட் பணிகள் ஓவர்.. 1ஆம் தேதி ரெடி..!
- Travel
கடவுள்கள் பேசுமா? ஆம்! இந்தியாவில் உள்ள இந்த கோவிலில் கடவுள்கள் பேசுகின்றனவாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
''நடிகைகளுக்கு மதிப்பே கிடையாது. ஒரு பொருட்டாக கூட பார்க்க மாட்டார்கள்”: தமன்னாக்கு என்னாச்சு?
மும்பை: தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் தமன்னா.
'பாகுபலி' படத்தின் மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகையானார் தமன்னா.
ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் தமன்னா.
விருமன் முதல் பொன்னியின் செல்வன் வரை...ரிலீசுக்கு காத்திருக்கும் 7 மெகா பட்ஜெட் படங்கள் இதோ

பாலிவுட்டில் இருந்து கோலிவுட்
தமிழில் அறிமுகமாகும் பெரும்பாலான நடிகைகள், இங்கிருந்து இந்தி திரையுலகம் செல்ல அதிகம் முயற்சி செய்வதுண்டு. ஆனால், பாலிவுட்டில் அறிமுகமாகி, தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கிய தமன்னா, 2006ல் வெளியான 'கேடி' படத்தின் மூலம் கோலிவுட்டிலும் அடியெடுத்து வைத்தார். அன்று முதல், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார்.

கார்த்தியுடன் காதல்!!
வியாபாரி, கல்லூரி, தனுஷுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நாயகியாக அசரடித்த தமன்னா, தெலுங்கிலும் பிஸியாக நடித்து வந்தார். கார்த்தியுடன் பையா, சிறுத்தை, தோழா என அடுத்தடுத்து லவ்லி பேபியாக ரசிகர்களை வசீகரித்த தமன்னாவுக்கு, கார்த்தியுடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டது.

பாகுபலி கொடுத்த அங்கீகாரம்
தமிழில் விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் என நல்ல படங்களில் நடித்திருந்த தமன்னாவிற்கு, ஒரேயொரு படம் மிகப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ரானா, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா ஆகியோர் நடிப்பில் பிரமாண்டமாக உருவான ';பாகுபலி' படத்தில், பிரபாஸ்க்கு ஜோடியாகவும், துணிச்சலான பாத்திரத்திலும் நடித்து, சர்வதேச அளாவில் புகழ்பெற்றார்.

ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக?
இந்நிலையில், தமிழில் கொஞ்சம் இடைவேளி விட்டுள்ள தமன்னாவிற்கு, ஜாக்பாட் ஒன்று அடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில், ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் சொல்லப்படுகிறது.

நாயகிகளுக்கு மரியாதையே இல்லை
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த தமன்னா, ''சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே கிடையாது. எங்கள் பேச்சை ஒரு பொருட்டாக கூட பார்க்க மாட்டார்கள்" என மிகக் காட்டமாகக் கூறியதாக தெரிகிறது. மேலும், "ஹீரோவை விட நாயகிகளுக்கு சம்பளம் குறைவாக வழங்கப்படுவதாகவும்,. இது சினிமா தோன்றியதில் இருந்தே தொடர்கிறது'' என்றும் குறிப்பிட்டுள்ளார். 'நாயகிகளின் போட்டோ பட போஸ்டர்'களில் வருவதே பெரிய விஷயம். என்றும், சினிமா ப்ரோமோஷனுக்கு ஹீரோக்கள் வராமல் இருந்தால் காரணம் சொல்வார்கள். ஆனால், நாயகி என்றால் குறைகூறுவார்கள்" எனவும் பேசியதாக சொல்லப்படுகிறது.