»   »  கடத்தல் கற்பழிப்பு அச்சம்... வாடகைக் கார்களுக்கு நோ சொல்லும் டாப் நடிகைகள்!

கடத்தல் கற்பழிப்பு அச்சம்... வாடகைக் கார்களுக்கு நோ சொல்லும் டாப் நடிகைகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபல நடிகை பாவனாவுக்கு நேர்ந்த கடத்தல், பாலியல் கொடூரத்தை கேள்விப்பட்ட பிறகு, காரில் தனியாகச் செல்ல அல்லது வாடகைக் கார்களில் செல்வதை முற்றிலுமாகத் தவிர்த்து வருகிறார்கள் முன்னணி நடிகைகள்.

பாவனாவுக்கு நேர்ந்த இந்த கொடுமையால் நயன்தாரா, த்ரிஷா, ஹன்சிகா, அனுஷ்கா, காஜல் அகர்வால் உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகள் பலர் அதிர்ச்சியில் உள்ளனர்.

Actresses refuse to travel with unknown drivers

நயன்தாரா டோரா, இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர் காலம், வேலைக்காரன் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

மோகினி, சதுரங்க வேட்டை-2, கர்ஜனை, 1818 போன்ற படங்களில் த்ரிஷாவும், அனுஷ்கா பாகுபலி இரண்டாம் பாகம், பாக்மதி படங்களிலும், காஜல் அகர்வால் விவேகம், நீனே ராஜா நானே மந்திரி என்ற தெலுங்கு படத்திலும் நடித்துக்கொண்டுள்ளனர். ஹன்சிகாவும் தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படப்பிடிப்புகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றன. தங்கியுள்ள ஹோட்டலிலிருந்து இந்த இடங்களுக்கு செல்ல, அல்லது விமான நிலையங்களுக்குச் செல்ல வாடகைக் கார்களில்தான் பெரும்பாலும் நடிகைகள் செல்கின்றனர். அல்லது கம்பெனி கார்களில் செல்வார்கள். இந்த கார்களை வெளி டிரைவர்கள்தான் ஓட்டுகின்ரனர்.

இனி தெரியாத டிரைவர்களுடன் தனியாக காரில் பயணிப்பதில்லை என முடிவெடுத்துள்ளனர்.

இதனால் நடிகைகளுக்கு பாதுகாப்பாக தெரிந்த நபர்களுடன் அல்லது சம்பந்தப்பட்ட நடிகைகளின் உறவினர்களுடன் கார்களில் தயாரிப்பாளர்கள் அனுப்பி வைக்கிறார்கள்.

English summary
After seen what happened to actress Bhavana, all the top Tamil actresses refused to travel in cars with unknown drivers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil