Aditi Rao Hydari Net worth - அதிதி ராவ் பிறந்தநாள்.. உண்மையில் மகாராணிதான்.. இத்தனை கோடி ரூபாய் சொத்தா?

சென்னை: நடிகை அதிதி ராவ் தமிழில் காற்று வெளியிடை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். கடந்த வருடம்தான் நடிகர் சித்தார்த்தை திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று அதிதி தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடிவரும் சூழலில் அவரது மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்ட அதிதி ராவ் அடிப்படையில் நல்ல பாடகர். ஆனால் காலம் அவருக்கு நடிகையாகும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க கடந்த 2006ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரஜபதி என்ற படத்தில் நடிப்பு பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழில் ஸ்ரீநகரம் என்ற படத்தில் நடித்தார். பெரிய அடையாளம் கிடைக்கவில்லை. அதேசமயம் ஹிந்தியில் டெல்லி 6, தோபி காட் என பல படங்களில் நடித்து ஃபேமஸ் ஆனார்.

தமிழில் ரீ என்ட்ரி: தொடர்ந்து ஹிந்தி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் மட்டும் கவனம் செலுத்திவந்த அதிதியை கடந்த 2017ஆம் ஆண்டு தான் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்துவந்தார் மணிரத்னம். படம் ஒன்றும் பெரிய ஹிட் இல்லை. அதேசமயம் அதிதியின் நடிப்பும், அழகும் கோலிவுட் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. தொடர்ந்து செக்கச்சிவந்த வானம், ஹே சினாமிகா என சில படங்களில் நடித்தார். மேலும் ஜெயில் படத்தில் ஒரு பாடலையும் பாடியிருந்தார்.

Aditi Rao Hydari Net Worth 2025 Actress Celebrates 47th Birthday Total Assets Worth 70 Crore
Photo Credit:

பெர்சனல் வாழ்க்கை: அதேசமயம் ஹிந்தியில் அவர் படுபிஸிதான். இதற்கிடையே கடந்த 2002ஆம் ஆண்டு சத்யதீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்திருந்தார். கிட்டத்தட்ட 11 வருடங்கள் அவர்களது வாழ்க்கை மிகச்சிறப்பாக சென்றுகொண்டிருந்தது. ஒருவருக்கொருவர் காதலோடு அந்த வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்தார்கள். ஆனால் திடீரென அவர்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் பெரிதாகி விவாகரத்தில் சென்று முடிந்தது.

சித்தார்த்துடன் திருமணம்: மிஸ்ராவுடனான பிரிவுக்கு பிறகு சிங்கிளாக இருந்த அவருக்கு நடிகர் சித்தார்த்துடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. சித்தார்த்தும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். இரண்டு பேரின் காதலுக்கும் வீட்டு சம்மதம் கிடைக்க; கடந்த வருடம் வானபார்தியில் இருக்கும் 400 வருடம் பழமையான கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். அதிதி ராஜ பரம்பரையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிதியின் சொத்து மதிப்பு: அவர் இன்று தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவரும் சூழலில்; அதிதியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி மொத்தம் அவருக்கு மட்டும் 70 கோடி ரூபாய் அளவில் சொத்து இருக்கிறதாம். ஒரு படத்துக்கு ஒரு கோடி ரூபாய் அளவில் சம்பளம் வாங்கும் அவருக்கு சென்னை, ஹைதராபாத், மும்பை ஆகிய இடங்களில் சொகுசு பங்களாக்கள் இருக்கின்றனவாம்.

மொத்தம் எவ்வளவு தெரியுமா?: நடிப்பு மட்டுமின்றி ரியல் எஸ்டேட், ஆர்ட் ஒர்க் என பிற தொழில்களை செய்தும் அதன் மூலமும் சம்பாதிக்கும் அவரிடம் ஏகப்பட்ட சொகுசு கார்களும் இருக்கின்றன. இதுதவிர்த்து சித்தார்த்தின் சொத்து மதிப்பையும் சேர்த்தால் மொத்தம் 130லிருந்து 140 கோடி ரூபாய்வை அதிதியிடம் சொத்து மதிப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X