For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வாரே வாவ்.. வெண்ணையில் செய்த சிலை அதிதி ராவ்.. ஒரு ஸ்பெஷல் ரிப்போட் !

  |

  சென்னை: பார்ப்பதற்கு வெண்ணையில் செய்த சிலைப் போல இருப்பவர் அதிதி ராவ் ஹைதாரி. லட்சனமான முகம்,பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் அழகு என அனைத்து அம்சங்களும் கொண்டவர்.

  ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட இவர், இந்திய அரச வம்சத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது கொள்ளுத் தாத்தா அசாம் மாநிலத்தின் ஆளுநர் ஆவார். மேலும் இவரது தயார் வித்யா ராவ் கர்நாடக இசைப்பாடகியும் எழுத்தாளரும் ஆவார்.

  1986ஆம் ஆண்டு அக்டோபர் 28ந் தேதி பிறந்த அதிதி, 2009ஆம் ஆண்டு நடிகர் சத்யதீப் மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றனர்.தற்போது முன்னணி நாயகியாக வளர்ந்து வரும் அதிதி ராவ் பற்றி ஒரு ஸ்பெஷல் ரிப்போட்.

  புதுமையின் வித்தகன்.. பார்த்திபனின் ஹிட் திரைப்படங்கள்.. ஒரு பார்வை !புதுமையின் வித்தகன்.. பார்த்திபனின் ஹிட் திரைப்படங்கள்.. ஒரு பார்வை !

  சிருங்காரம்

  சிருங்காரம்

  2007ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த "சிருங்காரம்" என்ற திரைப்படம் தான் இவருக்கு முதல் திரைப்படம் ஆகும். இப்படத்தில் தேவதாசி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். மேலும், இவர் நடித்த முதல் படத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்தார் என்பது பாராட்டக்கூடியதாக பார்க்கப்படுகிறது. மேலும், இப்படத்திற்கு 3 தேசிய விருதும், 2 தமிழக அரசு விருதும் கிடைத்துள்ளது.

   சிறந்த துணை நடிகை

  சிறந்த துணை நடிகை

  டெல்லி6, ஏ சாலி ஜிந்தகி, ராக்ஸ்டார், மர்டர்3 ஆகிய படங்கள் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கின. 2011ம் ஆண்டு வெளியான ‘ஏ சாலி ஜிந்தகி‘ என்ற திரைப்படம் இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றுத் தந்ததோடு. திரைத்துறையில் ஒரு நல்ல பெயரையும் பெற்றுத் தந்து கலைத்துறையில் நிலைத்து நிற்க செய்தது.

   மீண்டும் தமிழில்

  மீண்டும் தமிழில்

  ஏறக்குறைய 10 வருடம் கழித்து தமிழ் திரைத்துறையில் மீண்டும் காலடி எடுத்து வைத்த அதிதி ராவ். இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை‘ படத்தில் டாக்டர் லீலா ஆபிரகாம் என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்திருந்தார். கார்த்திக்கும் இவருக்குமான காதல் காட்சிகள் உண்மையில் காதலின் உச்சம் தொட்டதாக இருக்கும். இப்படத்திற்கு கூடுதல் சிறப்பாக அமைந்தது ஏ.ஆர.ரகுமான் இசை. இப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கு ஒலித்து படத்தின் வெற்றிக்கு வித்திட்டன.

  கிளாமராக

  கிளாமராக

  மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் பல முன்னணி நடிகர்களான சிம்பு, அரவிந்த் சாமி, அருண்விஜய், விஜய் சேதுபதியுடன் அதிதி நடித்தார். செல்வாக்கான குடும்பம், மாஃபியா கேங், தந்தைக்கு பின் அந்த இடம் யாருக்கு என்று மகன்களுக்குள் நடக்கும் வாரிசு யுத்தமே செக்கச் சிவந்த வானம், இப்படத்தில் செய்தியாளராகவும் மேலும் அரவிந்த்சாமியின் பெண் தோழியாகவும் எதார்த்த நடிப்பையும் சற்று கிளாமரையும் கூட்டி நடித்திருப்பார் அதிதி ராவ்.

   நல்ல பெயர்

  நல்ல பெயர்

  மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்திருந்தார். சைக்கோ கொலைகாரனிடம் சிக்கிக்கொள்ளும் ஒரு பெண்ணாக நடித்திருப்பார். இப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்ததோடு பல பட வாய்ப்புகளும் இவர் வீட்டுக்கதவை தட்டின என்று சொல்லலாம்.

   அதிதி காட்டில் மழை

  அதிதி காட்டில் மழை

  மணிரத்னம் இயக்கும் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும், துக்ளக் தர்பார், ஹே சினாமிகா ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார். ஹே சினாமிகா படத்தின் மூலம் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்குனராக புதிய அவதாரம் எடுக்கிறார். இப்படத்தில் அதிதி ராவுடன் துல்கர் சல்மான் , காஜல் அகர்வால் ஆகியோரும் நடிக்கின்றனர். எது எப்படியோ அடுத்த வருடம் அதிதி காட்டில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டத்தான் போகிறது

   கைவந்த கலை

  கைவந்த கலை

  அதிதி ராவ் நல்ல குரல் வளம் கொண்டவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் சொந்தக்குரலில் பாடி அசத்தியுள்ளார். ஹிந்தியில் பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பாட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வசந்த பாலன் இயக்கி வரும் ஜெயில் படத்தில் "காத்தோடு காத்தானேன்" என்ற பாடலை தனுஷூடன் இணைந்து பாடி அசத்தியுள்ளார். நடிப்பு, பாட்டு இரண்டுமே எனக்கு கை வந்த கலை என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார் அதிதி.

  Read more about: aditi rao hydari
  English summary
  A special report on actress Aditi Rao Hydari.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X