ஷங்கர் மகளுக்கு இப்படி ஒரு திறமையா... ரிலீசுக்கு முன்பே அசத்துறாரோ

சென்னை : விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ள டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், தனக்குள் இருக்கும் மற்றொரு திறமையையும் வெளிப்படுத்தி உள்ளார். இதற்காக பலரும் அவருக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். முதல் படத்திலேயே கார்த்திக்கு ஜோடியாக, பாவாடை தாவணியில் முழுக்க முழுக்க கிராமத்து பெண் கெட்அப்பில் நடித்துள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தான் இந்த படத்தை தயாரித்துள்ளது.

விரைவில் விருமன் ரிலீஸ்

விரைவில் விருமன் ரிலீஸ்

விருமன் படத்தின் ஷுட்டிங் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்டு, சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் மற்றொரு பருத்திவீரனாக இருக்கும் என கூறப்படுகிறது.

சோஷியல் மீடியா பிரபலம்

சோஷியல் மீடியா பிரபலம்

முதல் படமான விருமன் ரிலீசாவதற்கு முன்பே தமிழ் ரசிகர்களிடம் பிரபலமாகி விட்டார் அதிதி. அதற்கு காரணம் சோஷியல் மீடியாவில் அவர் வெளியிடும் அல்ட்ரா மாடர்ன் போட்டோஷுட் மற்றும் வீடியோக்கள் தான். நடிகையாக ரசிகர்களிடம் அறிமுகமாகி உள்ள அதிதி, தனக்குள் ஒளிந்திருக்கும் பாடும் திறமையையும் வெளிக்காட்ட உள்ளார்.

அட இப்படி ஒரு திறமையா

அட இப்படி ஒரு திறமையா

தெலுங்கில் உருவாகி வரும் Ghani படத்தில் தான் பாடகியாக அறிமுகமாக உள்ளதாக அதிதி தனது சோஷியல் மீடியா பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்தில் ரோமியோ ஜுலியட் என்ற பாடலை அதிதி தான் பாட உள்ளாராம். இந்த பாடல் பிப்ரவரி 8ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அதிதி அறிவித்துள்ளார்.

மற்றொரு கனவு நிஜமானது

மற்றொரு கனவு நிஜமானது

அதோடு அதிதி பதிவிட்டுள்ள ட்வீட்டில், பாடகியாக எனது முதல் பாடல். இதை உங்களுடன் பகிர நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்தேன். எனது மற்றொரு கனவு நிஜமாகி உள்ளது.என்னை மிகவும் நம்பி, இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த இசையமைப்பாளர் தமனுக்கு நன்றி. உங்களுக்கும் இது பிடிக்கும் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

அதிதி பகிர்ந்த போஸ்டர்

அதிதி பகிர்ந்த போஸ்டர்

அதோடு தான் பாடிய முதல் பாடல் வெளியாக உள்ளதை தனது போட்டோவுடன் வெளியிடப்பட்டுள்ள போஸ்டரையும் அதிதி பகிர்ந்துள்ளார். அதிதியின் முதல் பாடல் வெற்றி பெற இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பல பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதிதி அடுத்த படியாக வேல்ஸ் இன்டர்நேஷனல் பேனரில் டைரக்டர் கோகுல் இயக்கும் கொரோனா குமார் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

Recommended Video

Veerame Vaagai Soodum | Yuvan Shankar Raja | இந்த படம் ரொம்ப RAW வா இருக்கு | Filmibeat Tamil
வருண் தேஜ் படத்தில் அதிதி

வருண் தேஜ் படத்தில் அதிதி

Ghani படத்தில் வருண் தேஜ், சுனில் ஷெட்டி, மகேஷ் மஞ்சிரேக்கர், உபேந்திர ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு எஸ்.தமன் பின்னணி இசை அமைத்துள்ளார். விரைவில் இந்த படம் பற்றிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X