மொக்கை ஜோக் அதிதி ஷங்கர்.. போற இடங்களில் எல்லாம் இப்படி பண்ணா எப்படிம்மா.. கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் செல்லும் இடங்களில் எல்லாம் மொக்கை ஜோக் அடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
Recommended Video
அவரது வீடியோவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஷேர் செய்ய அதற்கு பலவிதமான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமான அதிதி ஷங்கர் அடுத்ததாக சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.

விருமன் தேன்
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தில் தேன் கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தித்திக்கும் என்ட்ரியை கொடுத்துள்ளார் அதிதி ஷங்கர். இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தனது முதல் படத்திலேயே தனது நடிப்பாலும் நடன திறமையாலும் ஏகப்பட்ட ரசிகர்களை கவர் செய்துவிட்டார்.

பாடகியும் கூட
அதிதி ஷங்கர் நடிகை மட்டுமின்றி நல்ல பாடகியாகவும் பாடல்களை பாடி அசத்தி வருகிறார். விருமன் படத்திலும் யுவன் சங்கர் ராஜா இசையில் அதிதி ஷங்கர் பாடிய பாடலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். விருமன் பட இசை வெளியீட்டு விழாவிலும் யுவன் உடன் சேர்ந்து பாட்டுப் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் அதிதி ஷங்கர்.

சிவகார்த்திகேயன் படத்தில்
விருமன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தில் அவருக்கு ஜோடியாக இணைந்துள்ளார் அதிதி ஷங்கர். மேலும், நடிகர் சூர்யாவுடன் நடிக்க வேண்டும் என்கிற தனது விருப்பத்தையும் பேட்டிகளில் வெளிப்படுத்தி உள்ளார்.

மொக்கை ஜோக் அதிதி
அதிதி ஷங்கர் செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்களை கவர மொக்கை ஜோக் சொல்லி வருகிறார். அவருக்கு மொக்கை ஜோக் அதிதி என்றே ரசிகர்கள் பட்டம் கொடுத்து விட்டனர். மேலும், அவரிடம் ஒரு மொக்கை ஜோக் சொல்லுங்க என்றும் ரசிகர்கள் கேட்க அவரும் கொஞ்சம் கூட கூச்சப்படாமல் மொக்கை ஜோக் அடித்து வருகிறார்.

போட முடியாத ஷூ
இந்நிலையில் அதிதி ஷங்கர் அப்படி அடித்த ஒரு மொக்கை ஜோக் வீடியோ சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில் அதிதி ஷங்கர் போட முடியாத ஷூ என்ன ஷூ என கேட்க, ரசிகர்கள் குழம்பிப் போய் நிற்க, கேஷூ என சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார். நல்ல வேளை நாகரீகம் கருதி அந்த வார்த்தையை சொல்லி விட வில்லை என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இதெல்லாம் ஹீரோயினா
அவ்ளோ பெரிய காமெடி இல்லை என்றும், எதையாவது உளறிட்டு இரு என்றும், சிவாங்கியை விட இவங்க தான் க்ரிஞ்ச் மேக்ஸ் என்றும் இதெல்லாம் ஹீரோயினா? தாங்குமா தமிழ் சினிமா என நெட்டிசன்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுக்ளை போட்டு கழுவி ஊற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications