மாவீரன் படத்தில் நடிக்க அதிதி ஷங்கருக்கு இவ்வளவு சம்பளமா? கோலிவுட் நடிகைகளின் கோபம் நியாயமானது தான்!
சென்னை: இயக்குநர் ஷங்கரின் மகள் விருமன் படத்தில் அறிமுகமாகிறார் என்று சொன்ன போது கூட இப்படியொரு புயல் வெடிக்கவில்லை.
ஆனால், அடுத்ததாக அவர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனதும், ஏகப்பட்ட பூகம்பங்கள் கிளம்பி வருகின்றன.
இதற்கெல்லாம் இன்னொரு காரணம் அதிதி ஷங்கருக்கு அந்த படத்தில் பேசப்பட்டுள்ள சம்பளம் தான் என்கின்றனர்.

விருமன் வருது
சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி நடிப்பில் உருவாகி உள்ள விருமன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் மூலம் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

விக்ரம் படத்துக்கு பிறகு
ஜூன் 3ம் தேதி வெளியான கமல்ஹாசனின் விக்ரம் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வசூல் வேட்டையை எந்த படமும் செய்யவில்லை. வார வாரம் வெளியாகும் மூன்று நாங்கு படங்கள் ஏன் வெளியாகிறது என்பது போல இருக்கிறது. இந்நிலையில், இந்த வாரம் வெளியாக உள்ள விருமன் படமாவது கோலிவுட்டிற்கு பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைத் தேடித் தருமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

புளியங் கொம்பா புடிக்கும் அதிதி
இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் அறிமுகமாக உள்ள நிலையில், அடுத்ததாக இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அடுத்தடுத்து புளியங் கொம்பா அதிதி புடிக்கிறாரே என மற்ற கோலிவுட் நடிகைகள் அவர் மீது பொறாமையில் பொங்கி வருகின்றனர்.

சம்பளம் எவ்வளவு தெரியுமா
அறிமுக படமான விருமன் படத்திலேயே அதிதி ஷங்கருக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகவும், சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடிக்க 25 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் இளம் நடிகைகள் இன்னமும் இவ்வளவு பெரிய தொகையை பார்க்காத நிலையில், அதிதி ஷங்கர் இரண்டாவது படத்திலேயே இவ்வளவு தொகையை பெறுவதால் தான் நெப்போடிசம் பிரச்சனை கிளம்பி இருக்கிறது என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











