»   »  அதிதியின் சாரதீ

அதிதியின் சாரதீ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரிதயாரிக்கும் சாரதீ என்ற படத்தில் அறிமுகமாகிறார்அதிதி. இவர் தெலுங்கு திரையுலகின் முன்னணிநாயகி ஆர்த்தி அகர்வாலின் தங்கை.

படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது செளத்ரியின்இரண்டாவது மகன் ரமேஷ். முதல் மகன் ஜீவாவைவைத்து செளத்ரி எடுத்த படங்கள் கையைசுட்டுவிடவே அவருக்கு கொஞ்சம் ஓய்வுகொடுத்துவிட்டு ரமேஷை ஹீரோவாக்கியுள்ளார்.

இந்த ரமேஷ் தெலுங்கில் ஏற்கனேவ வித்யார்த்தி உள்பட ஒரு சில படங்களில் நடித்தவர் தான். தமிழிலும்வின்சென்ட் செல்வாவின் இயக்கத்தில் ஜித்தன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படம்எப்போது முடியும் என்று தெரியவில்லை.

அதே போல அதிதியும் தனது அக்கா ஆர்த்தியின் சிபாரிசால் தெலுங்கில் திறமை காட்டிக் கொண்டிருப்பவர் தான்.ஆனால், அக்கா அளவுக்கு அங்கு முன்னுக்கு வர முடியாமல் தவித்து வரும் அதிதியை தமிழுக்கு அழைத்துவந்துள்ளது சூப்பட் குட் பிலிம்ஸ்.

சாரதீ ஒரு ஆக்ஷன் கலந்த ஹோம்லி சப்ஜெக்ட் கதையாம். படத்தை இயக்குவது பாலு. இவர் இயக்குனர்ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர். அவரது முதல்வன் இந்தி புராஜெக்டில் (அனில் கபூர் நடித்தநாயக்) பணியாற்றியவர். அத்தோடு பல இந்திப் படங்களில் அசோசியேட் டைரக்டாக இருந்துள்ளார்.

தமிழுக்கு இவர் புதுசு தான். ஆனால், திறமைசாலிகளை அடையாளம் கண்டுபிடித்து வாய்ப்பு தருவதில் சூப்பர் குட்பிலிம்ஸ் நிறுவனத்துக்கு இணையான நிறுவனம் தமிழில் எதுவுமில்லை. அந்த வகையில் பாலுவும் சிறப்பான திரைக்கதையைச் சொல்லித் தான் வாய்ப்பு கேட்டாராம்.

கதையில் லயித்த செளத்ரி தனது மகனையே ஹீரோவாக்க முடிவு செய்தார் என்கிறார்கள். படப்பிடிப்பும்உடனடியாக ஆரம்பித்து வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. வழக்கமாக அநாவசிய செலவுகளை தவிர்க்கும்செளத்ரி இதில் தனது மகனுக்காக கோடிகளை கணக்கு வழக்கில்லாமல் எடுத்து விட்டுக் கொண்டிருக்கிறார்.

படத்தில் ஹீரோயினாக மும்பையில் இருந்து புதுமுகத்தை இறக்குமதி செய்யும் முடிவில் இருந்தார்களாம். ஆனால்,ஆர்த்தி அகர்வாலின் செல்லமான சிபாரிசால் இந்த வாய்ப்பு அதிதிக்கு கிடைத்திருக்கிறது.

அதிதி தெலுங்கில் கொடுக்கு உள்ளிட்ட சில படங்களில் தலை காட்டியவர் தான் என்றாலும் இதுவரை ஒரு படமும்இவருக்கு கை கொடுக்கவில்லை. இதனால் தமிழ் பக்கமாக போ என்று அக்கா அனுப்பி வைத்திருக்கிறார்.

அதிதி தேறுவாரா.. பார்ப்போம்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil