ரிலாக்ஸ் ஆகியாச்சு....மீண்டும் ஷுட்டிங்கிற்கு வந்த சமந்தா

ஐதராபாத் : அக்டோபர் முதல் வாரத்திலேயே தனது காதல் கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக சமந்தா அறிவித்தார். நாக சைதன்யா - சமந்தா இருவருமே ஒரே சமயத்தில் ட்விட்டரில் தங்களின் விவாகரத்து பற்றி தெரிவித்தனர்.

இருந்தும் விவாகரத்திற்கு என்ன காரணம் என்பது பற்றி பல விதங்களில் வதந்தி பரவின. இதில் பலர் சமந்தா மீதே தவறு இருப்பதாகவும், அதற்கு பல காரணங்களை கூறியும் வந்தனர். தெலுங்கு யூட்யூப் சேனல்கள் சில சமந்தா பற்றி அவதூறு பரப்பியதால், அவர்கள் மீது சமந்தா வழக்கு தொடர்ந்தார்.

திரும்பி வந்த சமந்தா

திரும்பி வந்த சமந்தா

விவாகரத்து மற்றும் அவதூறுகளால் மிகுந்த மன வேதனையில் இருப்பதாக சமந்தாவே கூறி இருந்தார். அதைத் தொடர்ந்து தனது தோழியுடன் கேதார்நாத், கங்கோத்ரி உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றார். பிறகு அப்படியே துபாய் சென்று ஓய்வெடுத்து விட்டு, சமீபத்தில் தான் மனஅமைதியுடன் இந்தியா திரும்பி உள்ளார் சமந்தா.

புதிய படங்களில் ஒப்பந்தம்

புதிய படங்களில் ஒப்பந்தம்

நாக சைதன்யாவை பிரிவதாக அறிவிப்பதற்கு முன்பே புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகாமல் இருந்து வந்தார் சமந்தா. இதனால் சமந்தா இனி நடிக்க மாட்டார். அவர் நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டதாக தகவல்கள் பரவின. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இரண்டு முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் சமந்தா.

ஹாலிவுட் படத்தில் சமந்தா

ஹாலிவுட் படத்தில் சமந்தா

சமீபத்திய தகவலாக, பிலிப் ஜான் இயக்கும் ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் துப்பறியும் நிறுவனம் ஒன்றை நடத்தும் இருபாலின தமிழ் பெண்ணாக நடிக்க போகிறாராம் சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தற்போது ஹாலிவுட் படத்திலும் நடிக்க உள்ளது அவரது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

அயிட்டம் சாங்கிற்கு இவ்வளவு சம்பளமா

அயிட்டம் சாங்கிற்கு இவ்வளவு சம்பளமா

இதோடு அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா : தி ரைஸ் படத்தில் அயிட்டம் சாங் ஒன்றிற்கும் நடனம் ஆட சமந்தா ஓகே சொல்லி உள்ளாராம். அழகான போஸ்டருடன் சமந்தாவை இந்த படத்தில் வரவேற்றுள்ளனர் படக்குழுவினர். அல்லு அர்ஜுனுடன் இந்த பாடலுக்கு நடனம் ஆட சமந்தாவிற்கு ரூ.1.5 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.

Recommended Video

Vignesh Surprise-ல் கண்கலங்கிய Nayan | Samantha, Kala Master, Connect #HBDNayan
ஷுட்டிங்கை துவக்கிய சமந்தா

ஷுட்டிங்கை துவக்கிய சமந்தா

அயிட்டம் சாங் ஒன்றிற்கு சமந்தா நடனம் ஆடுவது இது முதல் முறை. இந்த பாடல் ஷுட்டிங்கை சமந்தா ஏற்கனவே துவங்கி விட்டாராம். கிட்டதட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு சமந்தா மீண்டும் ஷுட்டிங்கிற்கு திரும்பி வந்துள்ளார்.டைரக்டர் சுகுமார் இயக்கும் புஷ்பா படம், ஆந்திராவின் ராயலசீமா பகுதியில் உள்ள சேஷாச்சலம் மலைப்பகுதியில் செம்மரம் கடத்துபவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டதாகும். இந்த படம் டிசம்பர் 17 ம் தேதி பல மொழிகளில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X