»   »  மீண்டும் வருகிறார் ஜெனிலியா!

மீண்டும் வருகிறார் ஜெனிலியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கைத் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகிய நடிகை ஜெனிலியா, தற்போது மீண்டும் படங்களில் நடிக்க இருக்கிறார்.

பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம் உள்பட தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் ஜெனிலியா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தியிலும் நடித்து வந்த ஜெனிலியா, கடந்த 2012ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்த, ஜெனிலியாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

மீண்டும் சினிமா...

மீண்டும் சினிமா...

இந்நிலையில் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க இருக்கிறாராம் ஜெனிலியா. 'இட்'ஸ் மை லைஃப்' , 'ராக் த ஷாடி', மற்றும் 'ஹூக் யா க்ரூக்' என மூன்று படங்களில் அவர் நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளம்பரப் படங்களிலும்...

விளம்பரப் படங்களிலும்...

இதற்கிடையே சில விளம்பரப் படங்களிலும் அவர் நடிக்கத் தொடங்கியுள்ளார். இதற்கான படப்பிடிப்பு முடிந்துள்ளது.

ஹேப்பி...

ஹேப்பி...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடித்துள்ள மகிழ்ச்சியில் இருக்கிறார் ஜெனிலியா. தனது மகிழ்ச்சியை டிவிட்டர் பக்கத்தில் பதிவாக வெளிப்படுத்தி இருக்கிறார் அவர்.

3 ஆண்டுகளுக்குப் பிறகு...

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "படப்பிடிப்புக்கு சென்றுகொண்டிருக்கிறேன்...3 வருடங்கள் ஆகின்றன எனது கடைசி ஷாட் எடுத்து. இந்த நாள் மிக நல்ல நாளாக அமையும் என உணர்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

கணவர் வாழ்த்து...

கணவர் வாழ்த்து...

ஜெனிலியாவின் இந்த டிவிட்டை அவரது கணவர் ரித்தேஷ் தேஷ்முக் ரீடிவிட் செய்துள்ளார். அதில், "இது சிறந்த நாளாக அமையும். நீ அதற்காக தான் பிறந்திருக்கிறாய்" என ஜெனிலியாவை அவர் வாழ்த்தியுள்ளார்.

பெரிய சர்பிரைஸ்...

அதனைத் தொடர்ந்து மற்றொரு பதிவில், "3 வருடங்களுக்குப் பிறகு ஒரு விளம்பர படத்திற்கான ஷூட்டிங் நடந்தது. அனுபவித்து நடித்தேன். இன்னொரு விளம்பப் படத்திற்காக 2 நாட்களில் பாங்காக் செல்லவுள்ளேன். அங்கு பெரிய சர்பிரைஸ் காத்திருக்கிறது.என்னவென்று ஊகிக்க முடிகிறதா...?" என ஜெனிலியா கூறியுள்ளார்.

அப்போ கூடிய சீக்கிரமே குட் நியூஸ் சொல்லப் போறீங்க... இன்னொரு முறை சொல்லுங்க ஜெனி...!!

English summary
Actress Genelia Deshmukh has begun shooting for her upcoming project, which will mark her return to acting after a gap of three years.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil