லேடி சூப்பர் ஸ்டாருடன் அடுத்து டூயட் பாட போறது இவர் தானா?
சென்னை : விஜய், ரஜினி என டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
Recommended Video
நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் எப்போது, திருமணத்திற்கு பிறகு நயன்தாரா நடிக்க மாட்டாரா என்ற கேள்விகள் ஒரு பக்கம் இருந்தாலும், அந்த விஷயங்களில் தொடர்ந்து மவுனம் காப்பதுடன், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாகி நடித்து வருகிறார் நயன்தாரா.

தனி ஒருவன் டீமில் நயன்தாரா
தற்போது மீண்டும் இணையும் தனி ஒருவன் பட டீமில் நயன்தாராவும் இணைய போகிறாராம். பொன்னியின் செல்வன், அகிலன் உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்து வரும் ஜெயம் ரவி, டைரக்டர் அகமது இயக்கும் புதிய படம் ஒன்றிலும் நடிக்க போகிறாராம். ஏற்கனவே அகமது இயக்கிய என்றென்றும் புன்னகை படத்தில் நடித்தார் ஜெயம் ரவி.

பாதியில் நிறுத்தப்பட்ட ஜன கன மன
அதைத் தொடர்ந்து ஜெயம் ரவியை வைத்து பெரிய பட்ஜெட் படமாக ஜன கன மன படத்தை இயக்கி வந்தார் அகமது. இந்த படத்தில் ஜெயம் ரவி, ராணுவ அதிகாரி ரோலில் நடித்து வந்தார். இந்த படத்தின் சில காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா, லாக்டவுன் காரணமாக அந்த படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

மீண்டும் இணையும் கூட்டணி
2021 ல் ஜன கன மன இல்லாமல் அகமது இயக்கும் மற்றொரு படத்திலும் ஜெயம் ரவி நடித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் அந்த படம் கைவிடப்பட்டதா இல்லை ஜன கன மன படம் தானா என எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால் தற்போது, ஜெயம் ரவி- அகமது கூட்டணியில் பெயரிடப்படாத படம் ஒன்றில் தனி ஒருவன் பட டீம் மீண்டும் இணைய உள்ளதாம். ஜெஆர் 29 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் தான் நயன்தாரா நடிக்கிறாராம்.

ஜெஆர் 29 ஷுட்டிங் எப்போ
ஜெஆர்29 படம் இந்தியாவிலேயே படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்த படத்தின் ஷுட்டிங் ஏப்ரல் மாதத்தில் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா தான் இசையமைக்க போகிறாராம்.


Click it and Unblock the Notifications











