»   »  குண்டாவது குத்தமா?: ஐஸ்வர்யா ராயை அடுத்து விமர்சனத்திற்குள்ளான விஜய் தங்கச்சி

குண்டாவது குத்தமா?: ஐஸ்வர்யா ராயை அடுத்து விமர்சனத்திற்குள்ளான விஜய் தங்கச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: ஐஸ்வர்யா ராயை அடுத்து குண்டானதற்காக அதிகம் விமர்சிக்கப்பட்டவர் நடிகை சரண்யா மோகன்.

வேலாயுதம் படத்தில் விஜய்யின் செல்லத் தங்கச்சியாக நடித்த சரண்யா மோகன் திருமணத்திற்கு பிறகு நடிக்கவில்லை. ஒரு குழந்தை பெற்ற உடன் குண்டாகிவிட்டார்.

அவர் குண்டான பிறகு எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

கிண்டல்

கிண்டல்

இது என்ன சரண்யா இப்படி குண்டாகிவிட்டார், அதற்குள் ஆன்ட்டியாகிவிட்டாரே என்று ஆளாளுக்கு அவரை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு விமர்சித்தனர்.

சரண்யா

சரண்யா

பிரசவத்திற்கு பிறகு வெயிட் போடும் அதுவும் சிசேரியன் நடந்ததால் எனக்கு வெயிட் போட்டுவிட்டது என்று சரண்யா விளக்கம் அளித்தார். என் மனைவி குண்டானது தான் நாட்டின் முக்கிய பிரச்சனையா என்று அவரின் கணவர் கேட்டார்.

பொறுமை

பொறுமை

யார் கிண்டல் செய்தாலும் தான் குண்டாக இருப்பதால் வெட்கப்படவில்லை மாறாக தாயாகியுள்ளதால் பெரு மகிழ்ச்சியில் இருப்பதாகக் கூறி ஃபேஸ்புக்கில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் சரண்யா.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

பிரசவத்திற்கு பிறகு குண்டான ஐஸ்வர்யா ராயை ஆளாளுக்கு விமர்சித்தார்கள். அதன் பிறகு தற்போது சரண்யா விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
After actress Aishwarya Rai, Saranya Mohan was slammed for gaining weight after delivery.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil