»   »  அஜித்துடன் நடிப்பதை லட்சியமாக நினைக்கும் தமிழ் நடிகைகள்: பட்டியலில் இணைந்தார் எமி ஜாக்ஷன்

அஜித்துடன் நடிப்பதை லட்சியமாக நினைக்கும் தமிழ் நடிகைகள்: பட்டியலில் இணைந்தார் எமி ஜாக்ஷன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜித் படத்தில் ஜோடியாக நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார் ஹாலிவுட் நடிகையும், ஐ திரைப்பட கதாநாயகியுமான எமி ஜாக்சன். இதற்காக இயக்குநர் கவுதம் மேனன் வாயிலாக காய் நகர்த்தவும் தொடங்கியுள்ளாராம் இந்த அம்மணி.

கவுதம் மேனன் இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்கும், என்னை அறிந்தால் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள, அதாரு.. அதாரு.. என்ற ஒரு பாடல் யூடியூப்பில் வெளியிடப்பட்டது. இந்த பாடலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது. டிசம்பர் 31ம்தேதி இரவு மொத்த பாடல்களையும் களமிறக்க படக்குழு முடிவு செய்துள்ளதால் அஜித் ரசிகர்கள் குஷியிலுள்ளனர்.

ஹாலிவுட் டூ அல்டிமேட்

ஹாலிவுட் டூ அல்டிமேட்

இந்நிலையில் என்னை அறிந்தால் படத்தின் இயக்குநர் கவுதம்மேனனை சமீபத்தில் சந்தித்த, நடிகை எமி ஜாக்ஷன், கோலிவுட்டிலேயே தனக்கு பிடித்த நடிகர் அஜித் என்றும், அவருடன் ஒரு படத்திலாவது ஜோடியாக நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளாராம்.

விண்ணை தாண்டிவருவாயா நாயகி

விண்ணை தாண்டிவருவாயா நாயகி

கவுதம் மேனன் இயக்க, சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் திரிஷா கதாப்பாத்திரத்தில் எமி ஜாக்ஷன் நடித்திருந்தார். அதன்மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் இயக்குநரிடம் இப்படி தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளாரம் எமி ஜாக்ஷன்.

ரஜினிக்கு பிறகு அஜித்

ரஜினிக்கு பிறகு அஜித்

சில வருடங்களுக்கு முன்புவரை எந்த ஒரு ஹீரோயினாக இருந்தாலும், ரஜினிகாந்த்துடன் ஜோடி சேர வேண்டும் என்பதே தங்களது லட்சியம் என்று கூறுவது வழக்கம். இப்போது, அஜித்துடன் இணைய வேண்டும் என்பதே தங்கள் நடிப்புலக லட்சியம் என்று பல ஹீரோயின்கள் சொல்லி திரிகின்றனர்.

லட்சுமி மேனன், ஸ்ரீதிவ்யா

லட்சுமி மேனன், ஸ்ரீதிவ்யா

முன்னணி நடிகைகள் லட்சுமி மேனன், பிந்து மாதவி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலரும் அஜித்துடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று இயக்குநர்களுக்கு தூது விட்டுக் கொண்டுள்ளனர்.

நாங்க வந்தா மட்டும் போதும்..

நாங்க வந்தா மட்டும் போதும்..

இதில் வேடிக்கை என்னவென்றால் சில ஹீரோயின்கள், அஜித் படத்தில் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அவரது தங்கை வேடத்திலாவது நடிக்க வேண்டும். ஸ்கிரீனில் அஜித்துடன் இணைந்து தோன்றினால் போதும், தங்களது இமேஜ் எகிறும் என்று கூறி தூது விடுகிறார்கள்.

தாரை தப்பட்டை கிழியப்போகுது..

தாரை தப்பட்டை கிழியப்போகுது..

இப்படித்தான் மங்காத்தா திரைப்படத்தில் திரிஷா, அஞ்சலி, லட்சுமிராய் என ஏகப்பட்ட நடிகைகள் பட்டாளம் சேர்க்கப்பட்டது. ஆரம்பம் படத்திலும், நயன்தாரா, டாப்சி அஜித்துடன் நடித்தனர். என்னை அறிந்தால் படத்திலும், திரிஷா, அனுஷ்கா நடிக்கின்றனர். எனவே, நடிகைகளின் கோரிக்கைக்காகவே ஒன்றுக்கும் மேற்பட்டோரை அஜித் படத்தில் நடிக்க வைக்க வேண்டிய தர்ம சங்கடத்தில் இயக்குநர்கள் சிக்கியுள்ளனர். என்ன இருந்தாலும், 'தல டக்கருடோய்..'

English summary
Few years back, if an actress was asked who her favourite actor is, most of them would've said Rajinikanth and that they would like to be a part of at least one Rajinikanth movie. Though the situation hasn't changed completely, almost all next generation heroines opt for Ajith and the latest to join the never ending list is Amy Jackson.
Please Wait while comments are loading...