»   »  உடல் எடையைக் குறைத்தேன் வாய்ப்புகள் குவிகின்றன - நமீதா

உடல் எடையைக் குறைத்தேன் வாய்ப்புகள் குவிகின்றன - நமீதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

உடல் எடையைக் குறைத்ததால் பட வாய்ப்புகள் அதிகமாக வருகின்றன என்று நடிகை நமீதா தெரிவித்து இருக்கிறார். 2004 ம் ஆண்டு விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப்படதின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நமீதா.

தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல படங்களில் நடித்து தமிழில் ஒரு ரவுண்டு வந்தார். இந்நிலையில் நமீதாவின் உடல் எடை அதிகரித்துக் கொண்டே சென்றது.

கடைசியாக நடித்த இளைஞன் திரைப்படத்திற்குப் பின்பு வேறு எந்தப் புதிய படங்களிலும் நமீதா நடிக்கவில்லை. நீண்ட இடைவேளைக்குப் பின் சுமார் 5 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் நமீதா.

எங்கள் அண்ணா

எங்கள் அண்ணா

2004 ம் ஆண்டு விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப்படதின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நமீதா. நல்ல உயரமாக வாட்ட சாட்டத்துடன் இருந்த நமீதாவை தமிழ் ரசிகர்கள் தங்கள் கனவுக் கன்னியாக ஏற்றுக் கொண்டனர்.

முன்னணி நடிகர்களுடன்

முன்னணி நடிகர்களுடன்

தொடர்ந்து ஏய், இங்கிலீஷ்காரன், சாணக்யா, ஆணை, வியாபாரி, நான் அவனில்லை, பில்லா, பாண்டி உட்பட பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார். தமிழ் ரசிகர்களை மச்சான் என்று கூப்பிட்டதால் ரசிகர்கள் பலரும் நமீதாவின் தீவிர ரசிகர்களாக மாறினர்.

இளைஞன்

இளைஞன்

கடைசியாக பா.விஜய் நாயகனாக நடித்த இளைஞன்(2010) திரைப்படத்தில் நமீதா நடித்திருந்தார். இந்த படத்திற்குப் பின் அவரது உடல் எடை அதிகரித்துக் கொண்டே சென்றது. உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க முடியாததால் பல தமிழ்ப் படங்களில் நடிக்கும் வாய்ப்பை நமீதா இழந்தார்.

5 வருடங்கள் கழித்து

5 வருடங்கள் கழித்து

இளைஞன்(2010) படத்திற்குப் பின்பு சுமார் 5 வருடங்கள் கழித்து மீண்டும் நமீதா தற்போது நடிக்க வந்திருக்கிறார். கடந்த சில மாதங்களாக கடுமையான உடற்பயிற்சிகள் செய்து, உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார். சுமார் 20 கிலோ உடல் எடையைக் குறைத்த நமீதா தற்போது பழையபடி மீண்டுவிட்டார்.

நான் மீண்டுவிட்டேன்

நான் மீண்டுவிட்டேன்

எனது உடல் எடை அதிகரித்ததால் படவாய்ப்புகள் இல்லாமல் போனது. நண்பர்களாக இருந்தவர்கள் கூட உதவவில்லை, ஒதுங்கிப்போனார்கள். இப்போது உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைத்ததால் படவாய்ப்புகள் வந்து குவிகின்றன. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் புலிமுருகன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் ஒரு அதிரடியான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இதன் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. தமிழில் நடிக்க மீண்டும் கதைகள் கேட்டு வருகிறேன். குத்து சண்டை கற்று இருப்பதால் அதிரடி வேடங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது". இவ்வாறு நமீதா தெரிவித்தார்.

வைரலாகும் செல்பி

புலிமுருகன் படப்பிடிப்பின்போது நடிகர் மோகன்லாலுடன் நமீதா எடுத்துக் கொண்ட செல்பி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதனால் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கிறார் நமீதா.

English summary
After shedding weight, courtesy a strict diet and workouts, actress Namitha is all set to stage a comeback to films. Now She Get More Chances in film Industry.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil