தனிமையில் ஸ்ரீதேவி மகள்கள்...கொரோனா அனுபவத்தை பகிர்ந்த ஜான்வி கபூர்
மும்பை : இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதில் கோலிவுட், பாலிவுட் என பாரபட்சமின்றி திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
முன்னணி நடிகைகள் பலரும் தங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சோஷியல் மீடியாவில் கூறி வருவதால் ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

ஸ்ரீதேவி மகள்களுக்கு கொரோனா
லேட்டஸ்டாக மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் இரு மகள்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1970, 80 களில் இந்தியாவில் பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர்.

ஜான்வி கபூர் போட்ட போஸ்ட்
ஜான்வி கபூரும் பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். இவரது சகோதரி குஷி கபூர் விரைவில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக ஜான்வி கபூர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

தனிமையில் இருக்கிறோம்
ஜான்வி கபூர் தனது பதிவில், எனக்கும் எனது தங்கைக்கும் ஜனவரி 3 ம் தேதியன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவ ஆலோசனையின் பேரில் வீட்டு தனிமை நாட்களை முடித்து விட்டோம். தற்போது சோதனையில் நெகடிவ் என வந்து விட்டது. முதல் இரண்டு நாட்கள் மிக கடுமையாக இருந்தது எங்களுக்கு. அடுத்தடுத்த நாட்கள் சற்று பரவாயில்லை. இந்த வைரசிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள ஒரே வழி மாஸ்க் அணிவது, தடுப்பூசி போட்டுக் கொள்வது தான். அனைவரும் கவனமாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

லேட்டாக சொன்ன ஜான்வி
கடந்த சில நாட்களுக்கு முன் வாயில் தெர்மாமீட்டருடன் இருப்பது, சோர்வான முகத்துடன் படுத்திருப்பது போன்று தங்கையுடன் இருக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார் ஜான்வி கபூர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அவர்கள் இருவரும் தனிமையில் இருந்தது இப்போது தான் தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications











